வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிரம்ப்-க்கு ஆதரவாக பேசாத குடியரசு கட்சியினர்.. முதுகெலும்பு வேண்டும்... டிரம்ப் மகன் ஆவேசம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் மோசடிகள் தொடர்பாக அதிபர் டிரம்ப்-க்கு ஆதரவாக குடியரசு கட்சியினர் எதுவும் பேசாமல் மவுனமாக இருப்பதை அவரது மகன் எரிக் டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றிக் கோட்டை தொட்டுக் கொண்டிருக்கிறார். குடியரசு கட்சியின் வேட்பாளரான அதிபர் டிரம்ப்போ தேர்தலில் மோசடிகள் நடந்துவிட்டதாக கூறுகிறார்.

Where are Republicans! Have some backbone? asks Eric Trump

தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக அடுத்தடுத்து நீதிமன்றங்களை நாடி வருகிறார் டிரம்ப். தம்மிடம் இருந்து தேர்தல் வெற்றியை அபகரிக்க ஜனநாயக கட்சி முயற்சிக்கிறது என்றும் டிரம்ப் சாடி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

முன்னதாக டிரம்ப் மகன் எரிக் டிரம்ப் தமது ட்விட்டர் பக்கத்தில் குடியரசு கட்சியை மிக கடுமையாக சாடியுள்ளார். அவர் தமது ட்விட்டர் பதிவில், குடியரசு கட்சியினரே எங்கே போனீர்கள்? கொஞ்சம் முதுகெலும்புடன் இருங்கள். மோசடிகளுக்கு எதிராக குரல் கொடுங்கள்.. நீங்கள் ஆடுகளாக இருப்பின் உங்களை நமது வாக்காளர்கள் மறக்கவே மாட்டார்கள் என சாடியுள்ளார்.

Where are Republicans! Have some backbone? asks Eric Trump

ஏற்கனவே உலக நாடுகளின் வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரை தனிநாடாக குறிப்பிட்டு சர்ச்சையில் சிக்கியவர் ஜூனியர் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Eric Trump tweets that "Where are Republicans! Have some backbone. Fight against this fraud. Our voters will never forget you if your sheep!".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X