வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இம்ரான் கானை பார்த்து ட்ரம்ப் கேட்ட ஒரு கேள்வி.. லைவ் ஒளிபரப்பையே கட் செய்த பாக். டிவி சேனல்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    இம்ரான் கானை பார்த்து ட்ரம்ப் கேட்ட ஒரு கேள்வி..வீடியோ

    வாஷிங்டன்: அமெரிக்காவில் பாகிஸ்தான் நாட்டு பத்திரிக்கையாளரையும், இம்ரான் கானையும் நோக்கி அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எழுப்பிய ஒரு கேள்வியால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார்.

    ஐக்கிய நாடுகள் சபை பொது கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான், நியூயார்க் சென்றுள்ளார். அங்கு நேற்று அதிபர் டொனால்டு டிரம்ப் அவரை, மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

    அப்போது இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்தினார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது தான் அந்த திகுதிகு சம்பவம் அரங்கேறியது.

    தப்பு பண்ணிட்டோமேய்யா.. தப்பு பண்ணிட்டோமே.. அமெரிக்காவுடன் சேர்ந்ததே தப்பு.. இம்ரான் கான் புலம்பல்தப்பு பண்ணிட்டோமேய்யா.. தப்பு பண்ணிட்டோமே.. அமெரிக்காவுடன் சேர்ந்ததே தப்பு.. இம்ரான் கான் புலம்பல்

    செய்தியாளர் சந்திப்பு

    செய்தியாளர் சந்திப்பு

    செய்தியாளர் சந்திப்பின்போது பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர், தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பியபடியே இருந்தார். அவரது கேள்வி, வெறும், கேள்வியாக இல்லாமல், குற்றச்சாட்டுகளின் பட்டியலை போல் நீண்டது. இதனால் ட்ரம்ப் ரொம்பக் கோபம் அடைந்தார்.

    எங்கே பிடிக்கிறீர்கள்

    எங்கே பிடிக்கிறீர்கள்

    இம்ரான் கானை பார்த்து, "இந்த மாதிரி நிருபர்களை நீங்கள் எங்கே பிடிக்கிறீர்கள்" என்று அசால்டாக கேட்டார். அதுமட்டுமின்றி அந்த நிருபரை பார்த்து, நீங்கள் நிருபரா, அல்லது இம்ரான்கான் குழுவை சேர்ந்தவரா? கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, நீங்களே அறிக்கை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறீர்கள் என்றாரே பார்க்கலாம்.

    விடாத நிருபர்

    விடாத நிருபர்

    ஆனால் அந்த நிருபர் விடவில்லை. "நான் இம்ரான்கான் குழுவைச் சேர்ந்தவன் கிடையாது. நான் சுதந்திரமான ஒரு பத்திரிகையாளர். எனது கேள்வியை முடிப்பதற்கு நீங்கள் அனுமதியுங்கள்" என்றார்.

    லைவ் ஒளிபரப்பு

    லைவ் ஒளிபரப்பு

    டொனால்டு டிரம்ப்பின் இந்த கோபத்தால் பாகிஸ்தான் மீடியாக்கள் அப்செட் ஆகி உள்ளது தெளிவாகத் தெரிகிறது. இந்த செய்தியாளர் சந்திப்பின் நேரடி ஒளிபரப்பை பாகிஸ்தான் டிவி சேனல்கள் செய்தபடி இருந்தன. ஆனால் தங்கள் நிருபரை ட்ரம்ப் கேலி செய்ததும், திடீரென லைவ் ஒளிபரப்பை அவை நிறுத்திவிட்டது இதற்கு ஒரு அத்தாட்சி.

    English summary
    Pakistan and its Prime Minister Imran Khan were left red-faced after US President Donald Trump mocked one of the journalists of the country during a meet on the sidelines of the United Nations General Assembly (UNGA) in USA.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X