வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த புள்ளீங்க எல்லாம் பயங்கரம்.. எங்கப்பா புடிச்சீங்க இவங்களை.. இம்ரானை கலாய்த்த டிரம்ப்!

Google Oneindia Tamil News

Recommended Video

    இம்ரான் கானை பார்த்து ட்ரம்ப் கேட்ட ஒரு கேள்வி..வீடியோ

    வாஷிங்டன்: தொடர்ந்து காஷ்மீர் விவகாரத்தையே கேட்ட பாகிஸ்தான் நிருபரை எங்கே கண்டுபிடித்தீர்கள் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலாய்த்தார்.

    ஐக்கிய நாடு சபையின் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்கா வந்திருந்தார். அப்போது மாநாட்டின் இடையே இம்ரான் கானும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது அவர்களை நோக்கி பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் கேள்விகளை எழுப்பினார். அவர் காஷ்மீர் தொடர்பான கேள்விகளையே எழுப்பினார். அவர் கேட்கையில் காஷ்மீர் விவகாரத்தில் இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்கிறீர்கள். ஒருவர் (இந்தியா) மோதல் போக்கை கடைப்பிடிக்கிறார், ஐநா தீர்மானத்தை மீறி காஷ்மீரை தனது சொந்த நாட்டுடன் இணைக்கிறார்கள் என்றார்.

    பதில்

    பதில்

    அவருக்கு பதில் அளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நீங்கள் இம்ரான்கான் அணியை சேர்ந்தவரா என கேள்வி எழுப்பினார். நீங்கள் கேள்வியை கேட்காமல் பதிலை மட்டுமே சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்.

    கேள்விகளுக்கு பதில்

    கேள்விகளுக்கு பதில்

    எல்லாம் கேள்வியாக இல்லாமல் அறிக்கையாக இருக்கிறதே என டிரம்ப் கூறினார். அதற்கு பதில் அளித்த பத்திரிகையாளர் நான் இம்ரான் கான் அணியை சேர்ந்தவர் இல்லை. நான் ஒரு நடுநிலையான பத்திரிகையாளர் என்று கூறிய அவர் மேலும் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

    பாகிஸ்தான் நிருபர்

    பாகிஸ்தான் நிருபர்

    மீண்டும் கேள்வியை கேட்க முயன்ற அந்த பாகிஸ்தான் நிருபரிடம் கேள்வியை கேள்வியாக கேளுங்கள் என்று கிண்டல் செய்தார். மீண்டும் மீண்டும் காஷ்மீர் விவகாரம் குறித்தே அந்த நிருபர் கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தார்.

    சிரிப்பலை

    சிரிப்பலை

    இதனால் கடுப்பான டிரம்ப், இம்ரான் கானை பார்த்து இந்த மாதிரியான பத்திரிகையாளர்களை எங்கு கண்டுபிடித்தீர்கள் என கேட்டார். இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது. இம்ரான் கானும் சேர்ந்து சிரித்துவிட்டார்.

    English summary
    Donald Trump asks Pakistan PM Imran Khan in joint press meet that where do you find reporters?.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X