வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

9 மாதங்களாக உலகை கொரோனா உலுக்குகிறது.. ஐ.நா. எடுத்த நடவடிக்கை என்ன? மோடி 'நறுக்' கேள்வி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஐக்கிய நாடுகள் சபை காலத்திற்கேற்ப மாற வேண்டியது கட்டாயம் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 75 ஆவது கூட்டத் தில் காணொளி வாயிலாக உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது அவர் கூறியதாவது:

Where is UN In COVID19 fight? Where is its effective response? says, PM Modi in UNGA

ஐக்கிய நாடுகள் சபையின் 75வது கூட்டத்திற்கு இந்தியாவின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒன்று இந்தியா என்பதில் பெருமிதம் கொள்கிறோம். இந்த வரலாற்று சந்தர்ப்பத்தில், இந்தியாவின் 1.3 பில்லியன் மக்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கடந்த 8 முதல் 9 மாதங்களாக, உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வருகிறது. தொற்றுநோய்க்கு எதிரான இந்த கூட்டுப் போராட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபை எங்கே இருக்கிறது? மூன்றாம் உலகப் போர் தவிர்க்கப்பட்டாலும், பல போர்களும் உள்நாட்டுப் போர்கள் நடந்துள்ளதே. பலர் ரத்தம் சிந்தப்பட்டுள்ளதே. பல பயங்கரவாத தாக்குதல்கள் உலகை உலுக்கியுள்ளதே. ஐநா இதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?

ஒருங்கிணைந்த இலங்கையில் ஈழத் தமிழருக்கு நீதி- 13வது திருத்தத்தை அமலாக்க வேண்டும்: ராஜபக்சேவிடம் மோடிஒருங்கிணைந்த இலங்கையில் ஈழத் தமிழருக்கு நீதி- 13வது திருத்தத்தை அமலாக்க வேண்டும்: ராஜபக்சேவிடம் மோடி

காலத்திற்கு ஏற்ப ஐ.நா.சபையின் நடவடிக்கையில் மாற்றம் தேவைப்படுகிறது. ஐ.நா சபை சீர்திருத்தங்களுக்காக இந்திய மக்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

English summary
Today, people of India are concerned whether this reform-process will ever reach its logical conclusion. For how long will India be kept out of the decision-making structures of the United Nations?: PM Modi at UNGA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X