வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தடுப்பூசி எதற்கு.. கொரோனா வைரஸ் தானாகவே பொசுங்கி போகும்.. WHO முன்னாள் இயக்குநர் சூப்பர் தகவல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: "கொரோனா வைரஸ் எந்தவொரு தடுப்பூசியும் உருவாக்கப்படுவதற்கு முன்பு இயற்கையாகவே (burn out) அழிந்துவிடும்" என்று, உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைவர் கரோல் சிகோரா அதிரடியாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

"எல்லா இடங்களிலும் ஏறக்குறைய ஒரே மாதிரியான அணுகுமுறையை, காண்கிறோம். ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டதை விட அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி நம்மிடம் இருப்பதாக நான் கருதுகிறேன்," என்று WHO அமைப்பின், புற்றுநோய் திட்டத்தின் முந்தைய இயக்குனரான பேராசிரியர் கரோல் சிகோரா தெரிவித்த இந்த, கருத்து, உலக மக்களை, ஆசுவாசப்படுத்தியுள்ளது.

"நாம் வைரஸை பலமிழக்க வைக்க வேண்டும், பின்னர் அது தானாகவே போய்விடும். சமூக இடைவெளியை பின்பற்றினால், இது ஒரு சாத்தியமான சூழ்நிலைதான், என்பது எனது கருத்து. " என்று மேலும் அவர் தெரிவித்தார்.

தடுப்பு மருந்து போடப்பட்ட 6 குரங்குகளுக்கும் கொரோனா.. ஆக்ஸ்போர்டு பல்கலை தடுப்பு சோதனையில் பின்னடைவுதடுப்பு மருந்து போடப்பட்ட 6 குரங்குகளுக்கும் கொரோனா.. ஆக்ஸ்போர்டு பல்கலை தடுப்பு சோதனையில் பின்னடைவு

மருந்துக்கு தாமதம்

மருந்துக்கு தாமதம்

பிரிட்டன் பிரதமர், போரிஸ் ஜான்சன் கடந்த வாரம் அளித்த பேட்டியில் "கொரோனாவுக்கு, ஒரு நீண்டகால தீர்வு, தடுப்பூசி அல்லது மருந்து அடிப்படையிலான சிகிச்சையில்தான் உள்ளது" என்று வலியுறுத்தினார். ஆனால், மருந்து கண்டுபிடிக்க ஒரு வருடத்திற்கும் மேலாக காலக்கெடு நீளக்கூடும், என்றும் அவர் ஒப்புக் கொண்டார்.

மருந்து இல்லாவிட்டால் வெளியே போக மாட்டோம்

மருந்து இல்லாவிட்டால் வெளியே போக மாட்டோம்

இங்கிலாந்தில் கருத்துக் கணிப்பு ஒன்றுக்கு பதிலளித்தவர்களில் கால்வாசிக்கும் அதிகமானோர், தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பொது போக்குவரத்தை பயன்படுத்த மாட்டோம் என்று தெரிவித்தனர். ஒரு வேளை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமலே போனால் என்னாகும் என்ற கேள்வியை, இது எழுப்பியது. இந்த நிலையில்தான், கரோல் சிகோரா கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

தடுப்பூசி தேவையில்லை

தடுப்பூசி தேவையில்லை

முன்னதாக, தடுப்பூசி இல்லாமலேயே வைரஸ் பரவும் வேகத்தை குறைக்க முடியும் என்று சீனாவை சேர்ந்த ஆய்வகம் அறிவித்துள்ளது. சீனாவின் முன்னணி பல்கலைக்கழகமான, பீக்கிங் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் பரிசோதிக்கப்பட்ட ஆன்டிபாடி மருந்து பலன் அளித்துள்ளது. இது, பாதிக்கப்பட்டவர்களுக்கு குணமடையும் வேகத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், கொரோனா வைரஸிலிருந்து குறுகிய கால நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட அளிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க வெற்றி

அமெரிக்க வெற்றி

இது ஒரு பக்கம் என்றால், அமெரிக்காவைச் சேர்ந்த, மாடர்னா இன்க், என்ற பயோடெக் நிறுவனம், கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை, மனிதர்களிடம் வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்து உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால், மருந்தே தேவையில்லைப்பா என்கிறார், கரோல் சிகோரா.

English summary
Professor Karol Sikora, who was the director of a cancer program of the World Health Organization (WHO), has made a big claim about the 'death' of the corona virus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X