• search
வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

9 வயது.. மொத்தமாக மாற்றிய ஒரு டிவி ஷோ.. "செவ்வாய் நாயகி" சுவாதி மோகன் உருவான குட்டி ஸ்டோரி!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நாம் சின்ன வயதில் அதிகம் பார்த்த ஃபேண்டசி தொடர் என்னவாக இருந்திருக்கும்? சக்திமான்? சிலர் 'ஸ்மால் ஒண்டர்' என்று கூடச் சொல்லக்கூடும். ஆனால் அப்போது ரசித்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கச் சென்றிருப்போம்.

  யார் இந்த Swati Mohan? | NASA Perseverance Rover | Oneindia Tamil

  ஆனால், 9 வயசில் பார்த்த ஒரு சயின்ஸ் பிக்ஷன் தொடர், சுவாதி மோகன் வாழ்க்கையையே மாற்றிப் போட்டுள்ளது.

  ஆம்.. நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவரின் வழிநடத்தும் குழுவின் தலைவர் சுவாதி மோகன் பற்றிதான் சொல்கிறோம்.

  இந்தியாவுக்கும் உலகுக்கும் பெருமைமிகு தருணம் - சுவாதி மோகனை வாழ்த்திய ஸ்டாலின் இந்தியாவுக்கும் உலகுக்கும் பெருமைமிகு தருணம் - சுவாதி மோகனை வாழ்த்திய ஸ்டாலின்

  ரோவர்

  ரோவர்

  பெர்சிவரன்ஸ் ரோவர் சரியாக நேற்று வியாழக்கிழமை இரவு 10.55 மணிக்கு, செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. செவ்வாயின் மேற்பரப்பிலிருந்து புதிய ரோவர் எடுத்த முதல் புகைப்படத்தையும் பெர்சிவரன்ஸ் ரோவர் அனுப்பியுள்ளது.

  செவ்வாயில் ஜீவராசி உண்டா என்று..

  செவ்வாயில் ஜீவராசி உண்டா என்று..

  இந்த ரோவர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும். செவ்வாயின் ஜெசெரோ பகுதியில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னதாக, ஒரு பெரிய ஏரி இருந்ததுள்ளது. அதில் நீர் இருந்ததாகவும் கருதப்படுகிறது. எனவே, அப்பகுதியில் உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

  கம்பீர குரல்

  கம்பீர குரல்

  இந்த ரோவர் செவ்வாயின் மேற்பரப்பை வெற்றிகரமாக அடைந்த செய்தியை நாசா புரொபல்சன் லேபரேட்டரி வழிநடத்தும் குழு தலைவர் சுவாதி மோகன் "டச் டவுன் உறுதிப்படுத்தப்பட்டது! கடந்தகால வாழ்க்கையை தேடத் தொடங்க தயாராக உள்ள ரோவர், செவ்வாய் கிரக மேற்பரப்பில் விடாமுயற்சி பாதுகாப்பாக உள்ளது, " என்ற தகவலை அவர் கம்பீரமாக கூறியபோது மொத்த நாசா குழுவும் பூரித்துப்போனது.

  இந்திய வம்சாவளி

  இந்திய வம்சாவளி

  சரி ரோவரை விடுங்க. சுவாதி மோகன் யார் தெரியுமா. சாட்சாத் இந்திய வம்சாவளி பெண். பெங்களூர் பெண். ஆனால் சிறு வயதிலேயே பெற்றோர் அமெரிக்கா வந்துவிட்டனர். சுவாமி தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை வடக்கு வெர்ஜீனியா-வாஷிங்டன் மெட்ரோ பகுதியில்தான் கழித்தார்.

  ஒரு ஷோ மாற்றியது

  ஒரு ஷோ மாற்றியது

  பெரும்பாலான குழந்தைகளைப் போலவே, சுவாதி மோகனுக்கும் குழந்தை பருவத்தில் அடுத்து என்னவாகப்போகிறோம் என்ற ஐடியாவெல்லாம் இல்லை. ஆனால் 9 வயதாக இருந்தபோது முதன்முறையாக star trek சயின்ஸ் பிக்ஷன் நிகழ்ச்சியை பார்க்க நேரிட்டது. அமெரிக்காவில் அப்போது ரொம்பவே ஃபேமசாக இருந்த சீரிஸ் இதுவாகும். இதை பார்த்ததும் மனதிற்குள் ஒரு ஸ்பார்க். இந்த பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளிக்கொணர வேண்டும் என்று அவரது உள்ளம் துடிக்கத் தொடங்கியது. விஞ்ஞானியாக உருவெடுக்க ஆசை துளிர்த்தது.

   கை கொடுத்த படிப்பு

  கை கொடுத்த படிப்பு

  "இது 9 வயது ஆசை. ஆனால் 16 வயதாக இருந்தபோது, ​​குழந்தை மருத்துவராக வேண்டும் என்று கூட விரும்பினேன்." என்று சிரித்தபடியே சொல்லும் சுவாதி மோகன், நல்ல வேளையாக கார்னெல் பல்கலைக்கழகத்தில் இயந்திர மற்றும் விண்வெளி பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியில்லாவிட்டால் உலகம் போற்றும் விஞ்ஞானியாக மாறியிருக்க முடியாதே.
  ஏரோநாட்டிக்ஸ் / வானியல் துறையில் எம்ஐடியிலிருந்து எம்.எஸ் மற்றும் பி.எச்.டி படிப்பை முடித்தபோது அவருக்கான பரந்த உலகம் திறந்திருந்தது. நாசாவில் பணிக்கு சேர்ந்தது முதலே ஏற்றம்தான்.

  பல சாதனைகள்

  பல சாதனைகள்

  நாசாவின் செவ்வாய் ஆய்வு ரோவர் மிஷன் துவங்கியது முதலே, அந்த குழுவின் உறுப்பினராக உள்ளார். இது தவிர, அவர் பல முக்கியமான பணிகளில் சிறப்பாக பங்களித்தவர்தான். காசினி (சனி கிரக ஆய்வு பணி) திட்டங்களிலும் பணியாற்றியுள்ளார். ஆனால் செவ்வாய் கிரகத்தில் ரோவர் இறங்கியபோது, அதை கட்டுப்படுத்தி, வழிகாட்டும் மிகப்பெரிய பொறுப்பு சுவாமி கரங்களில்தான் இருந்தது. மொத்த நாசா குழுவும் கண்களை சிமிட்ட கூட மறந்து பரபரப்போடு பார்த்துக் கொண்டு இருந்தபோது வெற்றிகரமாக லேண்டிங் செய்து அசத்தியுள்ளார் சுவாதி. ஹேட்ஸ்ஆப்!

  English summary
  Like most children, Dr Swati Mohan has no idea what we are going to do next in childhood. But when She was 9, She first saw the star trek science fiction show. This was the most famous series in the United States at the time.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X