வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேகமாக பரவும் மங்கி பாக்ஸ்.. மீண்டும் வேக்சின் செலுத்த வேண்டுமா? WHO அளிக்கும் முக்கிய விளக்கம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகின் பல்வேறு நாடுகளிலும் மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை பரவ தொடங்கி உள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகவே வளர்ந்த நாடுகள் தொடங்கிப் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்தையும் கொரோனா வைரஸ் புரட்டிப் போட்டுவிட்டது. கொரோனா வைரசில் இருந்தே உலக நாடுகள் இப்போது தான் மெல்ல மீண்டு வருகிறது.

பாஜக பற்றிய திமுகவின் 3 பொய்கள் சுக்குநூறானது! பிரதமர் மோடி பேச்சால் வானதி சீனிவாசன் உற்சாகம்! பாஜக பற்றிய திமுகவின் 3 பொய்கள் சுக்குநூறானது! பிரதமர் மோடி பேச்சால் வானதி சீனிவாசன் உற்சாகம்!

ஆனால், அதற்குள் இப்போது அடுத்து ஒரு வைரஸ் பரவ தொடங்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எங்கு கொரோனா வைரஸ் போல மங்கி பாக்ஸ் வைரசும் வேகமாகப் பரவுமா என்று மக்கள் அச்சமடைந்தனர்.

 மங்கி பாக்ஸ்

மங்கி பாக்ஸ்

பொதுவாக ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே கண்டறியப்படும் இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு இப்போது பல்வேறு நாடுகளிலும் பரவி உள்ளது. வெறும் சில வார இடைவெளியில் இந்த வைரஸ் சுமார் 20 நாடுகளில் 200க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த வைரஸ் கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது. இந்த மங்கி பாக்ஸ் இதுவரை இல்லாத நாடுகளிலும் கூட பரவி உள்ளதே இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

 கொரோனா போல இல்லை

கொரோனா போல இல்லை

குறிப்பாக, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு வெளியே இந்த மங்கி பாக்ஸ் பரவுவது இதுவே முதல்முறையாகும். மங்கி பாக்ஸுக்கு எனத் தனியாக வேக்சினும் இல்லாத சூழலில், இது கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்நிலையில், இது குறித்து உலக சுகாதார அமைப்பின் Global Infectious Hazard Preparedness பிரிவின் இயக்குநர் சில்வி பிரைண்ட் கூறுகையில், "மங்கி பாக்ஸ் பரவல் என்பது கொரோனாவை போன்றது இல்லை. இருப்பினும், வரும் காலத்தில் அது எப்படி மாறும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது

 தரவுகள் இல்லை

தரவுகள் இல்லை

தற்போது நம்மிடம் ​​எத்தனை பெரியம்மை வேக்சின்கள் உள்ளன என்பது குறித்த தெளிவான தரவுகள் இல்லை. அனைத்து நாடுகளிடம் இருந்தும் இதுகுறித்து தரவுகளைக் கோரத் திட்டமிட்டுள்ளோம். இந்த மங்கி பாக்ஸ் பாதிப்புக்கு எதிராகப் பெரியம்மை வேக்சின்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மொத்தம் 9 ஆப்பிரிக்க நாடுகளில் மங்கி பாக்ஸ் நோய் என்டமிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வைரஸ் எங்கெல்லாம் பரவி உள்ளது என உறுதியாகத் தெரியவில்லை.

 யாருக்கு வேக்சின்

யாருக்கு வேக்சின்

இந்த வைரஸ் சமூகத்தில் எந்தளவுக்குப் பரவும் ஆபத்து உள்ளது என்பதை மதிப்பிடுவது சற்றே கடினமாகவே உள்ளது. நாம் இப்போதே சரியான நடவடிக்கைகளை எடுத்தால், அதை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம். தற்போதைய சூழலில் அனைவருக்கும் வேக்சின் போடத் தேவையில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட நபர்கள் உடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மட்டும் வேக்சின் போடுவது சரியான நடவடிக்கையாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

 மங்கி பாக்ஸ்

மங்கி பாக்ஸ்

உலகெங்கும் பல லட்சம் உயிரிழப்புகளை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் போல இல்லாமல் மங்கி பாக்ஸ் என்பது முழுக்க முழுக்க சிகிச்சை அளிக்கக் கூடிய ஒரு நோய்ப் பாதிப்பு தான். மங்கி பாக்ஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு முகம் மற்றும் கைகளில் கொப்பளங்கள் மற்றும் காயங்கள் ஏற்படும். இவை உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். இருப்பினும், மருத்துவச் சிகிச்சை இல்லாமலேயே பெரும்பாலான நோயாளிகள் 2 முதல் 4 வாரங்களுக்குள் குணமடைந்துவிடுவார்கள்.

 நீர்த்துளிகள் வழியாக

நீர்த்துளிகள் வழியாக

ஆர்த்தோபாக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரசால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே மங்கி பாக்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து வெளியேறும் நீர்த்துளிகள் வழியாகவே இந்த நோய் பரவுகிறது. தோல் புண்கள் மற்றும் அசுத்தமான பொருட்கள் மூலமும் இந்த நோய் பரவும். இந்த நோய் ஏற்படுபவர்களுக்கு பெரும்பாலும் 14 முதல் 21 நாட்கள் அறிகுறிகளுடன் கூடிய பாதிப்பு இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
World Health Organisation said that the monkeypox virus outbreak is not like Covid-19: (உலகில் பரவும் மங்கி பாக்ஸ் பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு) Does Small pox vaccine works against monkeypox.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X