வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்காவில் கொரோனாவுக்கு.. கருப்பர் இனத்தவரே அதிகம் பலி.. காரணம் என்ன.. அதிர வைக்கும் தகவல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவுக்கு கருப்பர் இனத்தவரே அதிகம் பலியாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    A facebook post doing viral , Manmohan has taken firm decision against US

    அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. நியூயார்க் சிட்டியில் மட்டும் 4000 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் நியூயார்க், நியூ ஜெர்சி உள்ளிட்ட நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    நியூயார்க்கில் உள்ள உயிரிழப்புகளை பார்க்கும் போது 2001-ஆம் ஆண்டு வர்த்தக மையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது இறந்தவர்களை காட்டிலும் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    கொரோனா

    கொரோனா

    இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனாவுக்குஆப்பிரிக்காவை சேர்ந்த கருப்பர் இன மக்களே அதிகம் இறக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிகாகோவில் உள்ள மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் ஆப்பிரிக்கர்கள் ஆவர். சிகாகோவில் நடந்த கொரோனா பலியில் 68 சதவீதம் பேரில் ஆப்பிரிக்கர்களும் அடங்குவர். இதே போல் வடக்கு கரோலினா, லவுசியானா, மெக்சிகன், விஸ்கான்சின், வாஷிங்டன்னில் கொரோனா பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது.

    மளிகைக் கடை

    மளிகைக் கடை

    கருப்பின மக்கள் கண்டிப்பாக வேலைக்கு வேண்டிய தேவை அதிகமாக உள்ளது. இதனால் அவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். கருப்பினத்தவர்கள் பெரும்பாலும் மக்களை சந்திக்கும் பணிகளையே செய்து வருகிறார்கள். அவர்களுள் ஏராளமானோர் பேருந்து ஓட்டுநர்களாகவும் பொது போக்குவரத்தை இயக்கும் பணியில் உள்ளோராகவும் நர்சிங் ஹோம்களில் பணியாற்றுவோராகவும் மளிகைக் கடையில் பணியாற்றுவோராகவும் உள்ளனர்.

    இதய நோய்

    இதய நோய்

    கருப்பின மக்களுக்கு சர்க்கரை நோய், இதய நோய், நுரையீரல் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. வறுமை மற்றும் இந்த நாள்பட்ட நோய்கள் கோவிட் 19 வருவதற்கு வழி வகுக்கிறது. அது போல் கருப்பர் இன பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர அதிகம் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    தகவல்

    தகவல்

    இதுவரை கோவிட் 19 பாதிக்கப்பட்டுள்ளோரில் இனத்தின் அடிப்படையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. கருப்பர் இன மக்கள் வறுமையால் வாடுகிறார்கள். மருத்துவ வசதிகளில் அவர்கள் பாகுபாட்டை சந்திக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியே வந்து வேலைகளை செய்து வருகிறார்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

    English summary
    Here are the reasons for Why African Americans are dying at higher rates amid Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X