வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

35 ஆண்டுகளில் 93 கொலைகள்.. அமெரிக்காவின் கொடூர ராட்சசன்.. சிக்கிய சாம்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் 35 ஆண்டுகளில் 93 கொலைகள் செய்த ராட்சசன் லிட்டில் சாமுவேல் தற்போது சிக்கியுள்ளார்.

கைது செய்யப்பட்ட அவர் தற்போது சிறையில் கம்பி எண்ணி வருகிறார். இதில் அவர் கொலை செய்த 50 பெண்களை மட்டுமே போலீசார் இதுவரை அடையாளம் கண்டுள்ளனர்.

அவர் வெள்ளை நிற பெண்களை அதிகம் கொலை செய்து இருந்தால் இந்த கொலைகள் முன்னரே வெளிச்சத்துக்கு வந்து இருக்கும் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.

 லிட்டில் கவலை கூட இல்லையே!

லிட்டில் கவலை கூட இல்லையே!

இத்தனை கொலைகள் செய்தபிறகும் தான் ஏதோ சாதனை செய்து விட்டதாக லிட்டில் சாமுவேல் வருத்தம் தெரிவிக்காமல் உள்ளார். லிட்டில் வாக்குமூலம் அளிக்கவில்லை என்றால், இவை எதுவும் தெரிய வந்திருக்காது என்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்தார்.

 உண்மையான ராட்சசன்

உண்மையான ராட்சசன்

நடிகர் விஷ்ணு விஷால் நடித்து தமிழில் வெளிவந்த ராட்சசன் திரைப்படம் சைக்கோ கில்லர் பற்றிய கதையாகும். அதில் சைக்கோ கில்லர் கொல்லும் காட்சிகள் பார்ப்பவர்களை குலை நடுங்க வைக்கும்.இதேபோல் ஒருவர் உண்மையில் அமெரிக்காவில் இருந்துள்ளார். 35ஆண்டுகளில் 93-க்கும் மேற்பட்ட கொலைகள். கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறதா?

 ஆடிப்போனார்கள்

ஆடிப்போனார்கள்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி சிறையில் சக்கர நாற்காலியில் வலம் வரும் அந்த 80 வயது நபரின் வாக்குமூலத்தை கேட்டு, இப்படித்தான் விசாரணை அதிகாரிகளே ஆடிப்போனார்கள். ஆனால் அந்த நபரோ எப்போதும் கூலாக இருக்கிறார். அந்த சைக்கோ நபர் யார்? இத்தனை ஆண்டுகள் அவர் பிடிபடாமல் இருந்தது எப்படி? என்பதை பற்றி பார்ப்போம்.

 லிட்டில் சாமுவேல்

லிட்டில் சாமுவேல்

அந்த சைக்கோ கில்லர் அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தை சேர்ந்த சாமுவேல் மெக்டவல். முன்னாள் குத்துச் சண்டை வீரரான இவர் குட்டையானவர் என்பதால் ‘சாமுவேல் லிட்டில்' என்று அழைக்கின்றனர். 1970-ல் இருந்து கொலை செய்து வந்த இவர் கொலை செய்வது குறித்து இருக்கும் தெரியவில்லை. கடந்த 2012-ம் ஆண்டு போதைப்பொருள் குற்றச்சாட்டில்தான் இவர் கைது செய்யப்பட்டார்.

 மிக மோசமானவன்

மிக மோசமானவன்

விசாரணையின் ஒரு பகுதியாக அவருக்கு மரபணு பரிசோதனை செய்தபோதுதான் அவர் ஒரு கொலைகாரன் என்பது வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1987-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 3 பெண்களை கொலை செய்தது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைத்தனர்.

 90 கொலைகள்

90 கொலைகள்

மேலும் சில சந்தேக மரணங்கள் தொடர்பாக அவரிடம் மத்திய புலனாய்வு குழு (எப்.பி.ஐ) விசாரணை நடத்தியது. அப்போதுதான் தோண்ட, தோண்ட புதையல் என்பதுபோல் அவரது வாயில் இருந்து நரம்புகளை சிலிர்க்க வைக்கும் தகவல்கள் வெளிவர தொடங்கின. அதாவது 1970-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரையிலான 35 ஆண்டுகளில் 19 மாகாணங்களில் 93 பெண்களை கொலை செய்ததாக அவர் அதிரவைத்துள்ளார். இதில் 50 கொலைகள் மத்திய புலனாய்வு குழு உறுதி செய்துள்ளது.

 அவர்கள் பாவம்

அவர்கள் பாவம்

லிட்டில் சாமுவேல் கருப்பின பெண்களை குறிவைத்தே கொலைகளை அரங்கேற்றியுள்ளார். பாலியல் தொழிலில் ஈடுபட்ட மற்றும் போதைக்கு அடிமையான பெண்களையே அவர் அதிகம் கொலை செய்துள்ளார். மேலும் கணவரை, குடும்பத்தை பிரிந்த பெண்களை குறிவைத்து தனது காரியத்தை சாதித்துள்ளார். அவரது நினைவுத்திறன் அதிசயத்தக்கது. அவர் தன்னால் பாதிக்கப்பட்ட ஏராளமான பெண்களின் படங்களை வீட்டில் வரைந்து வைத்துள்ளார். லிட்டில் சாமுவேலின் முதல் கொலையாளி 33 வயதான மேரி ப்ரோஸ்லி என்ற பெண்தான்.

 வீட்டில் படங்கள்

வீட்டில் படங்கள்

1971 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் மதுபோதைக்கு அடிமையாகி கணவரை பிரிந்து வந்த அவரை லிட்டில் சாமுவேல் கொலை செய்தார். அதில் இருந்துதான் அவரது கொடூர ஆட்டம் ஆரம்பித்தது. இத்தனை கொலை செய்தும் லிட்டில் சாமுவேல் முதலிலேயே பிடிபடாமல் இருந்தது பாதிக்கப்பட்ட பெண்கள் குடும்பத்தில் இருந்து புகார் தெரிவிக்காததே என்று கூறப்படுகிறது.

 போலீசார் மெத்தனம்

போலீசார் மெத்தனம்

கடந்த 2008-ல் இருந்து இதுவரை 700 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம்விசாரணை நடத்தப்பட்டதால் 93 கொலைகளில் 50 கொலைகளுக்கு மட்டுமே போலீசார் பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் கண்டுபித்துள்ளனர். லிட்டில் வாக்குமூலம் அளிக்கவில்லை என்றால், இவை எதுவும் தெரிய வந்திருக்காது என்று இந்த வழக்கில் பணியாற்றிய நீதித்துறை அதிகாரி ஏஞ்சலா வில்லியம்சன் தெரிவித்தார்.

 முன்னரே முடிந்து இருக்கும்

முன்னரே முடிந்து இருக்கும்

அவர் கொலை செய்ததில் 60-க்கும் மேற்பட்டவர்கள் கறுப்பின பெண்கள்தான். ஒருவேளை கொலை செய்யப்பட்டதில் வெள்ளை இந பெண்கள் அதிகம் இருந்தால் இந்த வழக்கு முன் கூட்டியே தீர்க்கப்பட்டு இருக்கும் என்று குற்ற வழக்குகளை பற்றி எழுதி வரும் நிபுணர் ஒருவர் கூறினார். லிட்டில் சாமுவேலால் பாதிக்கப்பட்டது திருநங்கைகள், விரக்தியால் குடும்பத்தில் இருந்து ஓடிப்போனவர்கள்தான் அதிகம்.

 வருத்தம் இல்லை

வருத்தம் இல்லை

காணமல் போனவர்களை பற்றி போலீசார் விரைவாக கண்டுபிடித்து இருந்தால் இந்த விவகாரம் முன்னரே தெரிய வந்து இருக்கும் என சில அமெரிக்க ஊடகங்கள், பத்திரிகைகள் தெரிவித்தன. இத்தனை கொலை செய்தும் லிட்டில் சாமுவேல் எந்த வருத்தமும், அலட்டலும் காட்டி கொள்ளவில்லை.

English summary
Police have so far identified only 50 of the 93 murders committed by American psycho killer, Little Samuel in 35 years
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X