வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த சிரிப்பை பாருங்க.. கமலா ஹாரிஸ் பற்றி மட்டமாக கமெண்ட் அடித்த டொனால்ட் ட்ரம்ப்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: "எதுக்கு இப்படி சிரிக்கிறார்.. அவருக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது" என்று ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் பற்றி மோசமாக கமெண்ட் அடித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

2016 அமெரிக்க தேர்தலின்போது, ஜஸ்ட் மிஸ் மாதிரி, டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற தொகுதி பென்சில்வேனியா மாகாணம். எனவே இந்த முறை நிலைமை இன்னும் மோசம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக அங்கு தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார், அதிபரும் குடியரசு கட்சி வேட்பாளருமான, டொனால்ட் ட்ரம்ப்.

அடுத்தடுத்து, பென்சில்வேனியா பகுதியில் 3 தேர்தல் பிரச்சாரங்களை டொனால்டு டிரம்ப் நடத்தினார்.

அமெரிக்கா அதிபர் தேர்தல் எப்போது? வாக்குப்பதிவு நேரம் என்ன?.. சுவாரஸ்ய தகவல்கள் இதோ! அமெரிக்கா அதிபர் தேர்தல் எப்போது? வாக்குப்பதிவு நேரம் என்ன?.. சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

தொலைக்காட்சி நிகழ்ச்சி

தொலைக்காட்சி நிகழ்ச்சி

தனது உரையின் போது, கமலா ஹாரிஸ் பற்றி மோசமாக விமர்சனம் செய்தார் டொனால்ட் டிரம்ப். அவர் கூறியதை பாருங்கள்: ஜோ பிடன் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிந்துள்ளார். நேற்று இரவு அவர் தொலைக்காட்சியில் எப்படி சிரித்துக்கொண்டே இருந்தார் என்பதை நீங்கள் பார்த்தீர்களா.

ஹாஹாஹா சிரிப்பு

ஹாஹாஹா சிரிப்பு

60 நிமிடங்கள் நடந்த இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க நகைச்சுவை நிகழ்ச்சி போல இருந்தது. ஜோ பைடன் எப்படி அந்த நிகழ்ச்சியில் நடந்துகொண்டார் என்பதை பார்த்தீர்களா. கமலா ஹாரிஸ் போலவே மோசமான ஒரு விஷயம் இருக்கிறது என்றால் அது அவரது சிரிப்புதான். ஹாஹா அது ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது. ஹாஹாஹா.. அவர் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருக்கிறார். அவரிடம் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

 கமலா ஹாரிஸ் பிரச்சினை

கமலா ஹாரிஸ் பிரச்சினை

ஏதோ பிரச்சனை இருப்பது போல தெரிகிறது. இப்படிப்பட்டவரை அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக நீங்கள் உருவாகி விடக்கூடாது. அவரது சிரிப்பு பற்றி எனக்கு சீரியஸாகவே சந்தேகம் இருக்கிறது. இப்படிக் கூறியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப். கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் வெற்றிபெற்றால் ஜோ பைடன் அதிபராக அரியணை ஏறும் போது அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெறுவார் இவர். பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடன் அதிக செல்வாக்கு கொண்டிருப்பதாக சமீபத்திய கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பூசி தாமதம்

கொரோனா தடுப்பூசி தாமதம்

டிரம்ப் மேலும் கூறுகையில், மிகவும் முக்கியமான கேள்விகள் அவரை நோக்கி எழும்பிய போது கூட கமலா ஹாரிஸ் வெறுமனே சிரித்துக் கொண்டுதான் இருந்தார். அவர் அதை ஒரு வேடிக்கையாகத்தான் எடுத்துக் கொள்கிறார். ஒருவேளை ஜோ பிடன் அதிபரானால், கொரோனா வைரஸ் தடுப்பூசி வெளியாவதில் தாமதம் செய்வார்கள். இந்த நோய் பரவலை அதிக நாட்கள் நீடிப்பார்கள். பள்ளிகளை மூடி வைப்பார்கள்.

தூங்கு மூஞ்சி

தூங்கு மூஞ்சி

பிடனுக்கு எந்த ஒரு தெளிவும் கிடையாது. சீன அதிபர், ரஷ்ய அதிபர், வட கொரியா அதிபர் உட்பட 40 தலைவர்கள் பெயரை என்னால் குறிப்பிட முடியும். அவர்கள் ரொம்பவே புத்திசாலிகள். தூங்குமூஞ்சி ஜோ பிடனுடன் அவர்கள் ஒப்பந்தம் செய்துகொள்ள மாட்டார்கள். எப்போது பார்த்தாலும் தூங்கிக்கொண்டு இருக்கும் ஒருவரிடம் எப்படி நாங்கள் ஒப்பந்தம் செய்துகொள்ள முடியும். தயவு செய்து நீங்களே மறுபடி அதிபராக வெற்றி பெற்று விடுங்கள் என்று ஒரு தலைவர் என்னிடம் தெரிவித்தார். உங்களால் நம்ப முடிகிறதா? என்று வாக்காளர்களிடம் அவர் கேள்வியும் எழுப்பினார்.

English summary
US President Donald Trump says, Joe Biden always sleeping, no world leaders, want to deal with him if he elected as president and he added, something wrong with Kamala Harris over her laughing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X