வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு.. அமெரிக்காவில் ஆச்சர்யப்பட வைத்த 2 மாநிலங்கள்.. எப்படி சாத்தியம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டிற்கு சொந்தமான இரண்டு தீவுகளில் மட்டும் கொரோனா பாதிப்பு ஒற்றை இலகத்தில் தான் உள்ளது. அதையும் அந்த மாநில அரசுகள் முழுமையாக கட்டுப்படுத்தி உள்ளது.

Recommended Video

    கொரோனாவுடன் கைகோர்க்க இருக்கும் புயல்... அச்சத்தில் அமெரிக்கா

    அமெரிக்காவின் யுஎஸ் வெர்ஜின் தீவு மற்றும் அமெரிக்காவின் வடக்கு மரியானா தீவுகள் ஆகிய இரண்டிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது.

    யுஎஸ் வெர்ஜின் தீவில் (அமெரிக்க கன்னித் தீவுகள்) தற்போதைய நிலவரப்படி 7 பேருக்கு தான் கொரோனா பாதிப்பு உள்ளது. ஒட்டுமொத்தமாக அந்த தீவில் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதில் 43 பேர் குணம் அடைந்துவிட்டனர். 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒருவர் உயிரிழந்துவிட்டார்.

    இந்தியாவில் கொரோனாவுக்கு பலி 273; பாதித்தோர் எண்ணிக்கை 8,356 இந்தியாவில் கொரோனாவுக்கு பலி 273; பாதித்தோர் எண்ணிக்கை 8,356

    11 பேருக்கு பாதிப்பு

    11 பேருக்கு பாதிப்பு

    இதேபோல் அமெரிக்காவின் மற்றொரு தீவான வடக்கு மரியனா தீவுகளில் இதுவரை மொத்தமே 11 பேர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் 2 பேர் உயிரிழந்தனர். 7 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக யுஎஸ் வெர்ஜின் தீவில் முன்னெச்சரிக்கையாக கடந்த மார்ச் 24ம் தேதியே லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.

    சமூக விலகல்

    சமூக விலகல்

    அந்த மாநிலத்தின் எல்லைகள் முழுமையாக அடைக்கப்பட்டது. மக்கள் சமூக விலகலை கடைபிடித்தனர். உணவங்கள், பார்கள். வர்த்த நிறுவனங்கள் என அனைத்துமே வரும் ஏப்ரல் 25வரை ஒருமாதத்திற்கு மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லாக்வுடன் அறிவிப்பு மற்றும் சமூக விலகல் ஆகியவை யுஎஸ் வெர்ஜின் தீவை கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க வைத்துள்ளது. இதேபோல் அமெரிக்காவின் மரியானா தீவும் அமெரிக்காவில் இருந்தாலும் தன்னாட்சி பிரதேசம் ஆகும். அங்கு சீனர்கள் வர ஜனவரி 20லேயே தடை விதிக்கப்பட்டது. மற்றும் பிறநாட்டினர் வர தடை விதிக்கப்பட்டது உள்ளிட்டவை அந்த மாநிலத்தை கொரோனாவில் இருந்து தப்பிக்க வைத்துள்ளது.

    30 டிகிரி செல்சியஸ்

    30 டிகிரி செல்சியஸ்

    அமெரிக்காவின் யுஎஸ் வெர்ஜின் தீவு மற்றும் அமெரிக்காவின் வடக்கு மரியானா தீவுகள் ஆகிய இரண்டிலும் வெப்ப நிலை என்பது அமெரிக்காவின் மற்ற பகுதிகளை ஒப்பிடும் போது வித்தியாசமானது. அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட பகுதிகளில் 3 டிகிரி செல்சிஸ் ஆக உள்ள நிலையில் இங்கு 30 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் உள்ளது.

    சமூக விலகல்

    சமூக விலகல்

    கொரோனாவால் அமெரிக்கா மொத்தமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இந்த இரண்டு தீவுகள் மட்டும் கொரோனாவால் பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பதற்கு அமெரிக்காவின் யுஎஸ் வெர்ஜின் தீவு மற்றும் அமெரிக்காவின் வடக்கு மரியானா தீவுகள் ஆகிய இரண்டும் தீவுகள் என்பதால் எளிதாக தனிமைப்படுத்தப்பட்டன. அத்துடன் ஊரடங்கு மற்றும் சமூக விலகல் முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    English summary
    why United States Virgin Islands and Northern Mariana Islands not badly affect covid 19 ? social distance and temprature is important reason
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X