வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இவ்வளவு நடந்தும் உலக நாடுகள் இந்தியாவை எதிர்ப்பதில்லை ஏன் தெரியுமா? இம்ரான் கான் குமுறலை பாருங்க

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் பொது சபையில் தான் ஆவேசமாக பேசியும் கூட, உலக நாடுகளின் ஆதரவு பாகிஸ்தானுக்கு கிடைக்காத நிலையில், தனது ராகத்தை மாற்றியுள்ளார் அந்த நாட்டு பிரதமர் இம்ரான்கான்.

அமெரிக்காவில் சிஎன்என் தொலைக்காட்சி சேனலுக்கு இம்ரான்கான் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் அவர் கூறியதை பார்த்தால் உங்களுக்கே அது புரியும்.

இம்ரான் கான் வார்த்தைகளிலிருந்து, "ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துவிட்டதால், அந்த நாட்டு பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டமே எங்களுக்கு கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நிலைப்பாடு

இந்தியாவின் நிலைப்பாடு

இம்ரான் கான் இப்படி சொல்லலாம். அதே நேரம் நீண்ட காலமாகவே, பாகிஸ்தான் தனது தீவிரவாத ஆதரவு நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் இந்தியா பேச்சுவார்த்தை நடத்து என்று இந்திய தரப்பு தெரிவித்து வருகிறது என்பது இதில் கவனிக்கதக்கது.

சந்தையாம்

சந்தையாம்

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில், உலகநாடுகள், இந்தியாவை கண்டிக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள இம்ரான்கான், "பல உலக நாடுகளின் தலைவர்களுக்கு காஷ்மீரில் என்ன நடக்கிறது என்ற உண்மை தெரியவில்லை. உண்மை தெரிந்த சில உலக நாட்டு தலைவர்கள் இந்தியாவை 120 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட.. தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த கூடிய நாடாக பார்க்கிறார்கள். எனவே அவர்கள் இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. இது ஒரு சோகமான விஷயம், என்று அவர் பதில் அளித்துள்ளார்.

இப்படி பேசினால் எப்படி

இப்படி பேசினால் எப்படி

"காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் தலையீட்டை ஏற்கமுடியாது, இது இரு நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று மோடி கூறுகிறார். ஆனால் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டால், இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை என்று தெரிவித்து விடுகிறார். இதனால் நாங்கள் என்ன செய்வது என்று புரியவில்லை.

இனிமேல் மாறுமாம்

இனிமேல் மாறுமாம்

ஆனால் நல்ல வேளையாக அமெரிக்காவில் இப்போது நான் செய்துள்ள இந்த சுற்றுப் பயணத்தின் விளைவாக, சர்வதேச சமூகம், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது." இவ்வாறு தெரிவித்துள்ளார்.

English summary
Pakistan Prime Minister Imran Khan has said he is confident that ultimately the international community will take note of the situation in the Valley.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X