• search
வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

எஃப்.டி.ஏ அங்கீகாரம் தராத.. கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அமெரிக்கா செல்ல முடியாதா?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கான அனுமதியை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) நிராகரித்துள்ளதால் இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் பயணிகள் குறிப்பாக, மாணவர்களுக்கு, தடை விதிக்கப்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் தொழில் கூட்டாளி ஒகுஜன் நிறுவனம் அமெரிக்காவில் இந்த தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்து இருந்தது. ஆனால் இந்த கோரிக்கையை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஏற்க மறுத்து உள்ளது.

Will denial of US approval for Covaxin stop students going there?

கூடுதலாக பரிசோதனைகளை நடத்திய முடிவுகளை தர வேண்டும் அதன்பிறகுதான் பயோ உரிமை விண்ணப்பத்திற்கு தாக்கல் செய்ய முடியும் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கோவாக்சின் தடுப்பூசி சோதனையிலிருந்து ஒரு பகுதி டேட்டாவை மட்டுமே சமர்ப்பித்ததால் ஒகுஜென் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. எஃப்.டி.ஏ கடந்த மாதம் கோவிட் தடுப்பூசி ஒப்புதலுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதலை வெளியிட்டது. இது இனி புதிய தடுப்பூசி பயன்பாடுகளுக்கு அவசர அங்கீகாரத்தை வழங்காது என்று கூறியிருந்தது.

  Wuhan lab மர்மம்.. வெளியான அமெரிக்க ஆய்வாளர்களின் ரகசிய அறிக்கை

  அமெரிக்கா அனுமதி மறுத்திருப்பதால், கோவாக்சினில் ஏதோ தவறு இருப்பதாக அர்த்தமா?

  உண்மை இல்லை. அவசர ஒப்புதலுக்கு பதிலாக தடுப்பூசிக்கான முழு அங்கீகாரத்திற்கு ஒகுஜென் விண்ணப்பிக்கலாம் என்று அமெரிக்க எஃப்.டி.ஏ பரிந்துரைத்துள்ளது. அதாவது அமெரிக்க எஃப்.டி.ஏ-க்கு இப்போது "கூடுதல் தகவல் மற்றும் தரவு" தேவைப்படுகிறது. அதிக மனித மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகளை காட்ட வேண்டும்.

  இருப்பினும், இது பாரத் பயோடெக் மற்றும் ஒகுஜெனுக்கு ஒரு பின்னடைவுதான். கோவாக்சினுக்கு அமெரிக்காவில் பயன்படுத்த அனுமதி கிடைக்க அதிக காலக்கெடு தேவைப்படும். கோவாக்சின் ஒப்புதல் பெற ஒரு வருடம் வரை ஆகக்கூடும்.

  கோவாக்சின் மருந்தை வேறு பல நாடுகளும் ஏற்க மறுத்துள்ளதா?

  மார்ச் மாதத்தில் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் தளத்தை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, கோவாசினுக்கு உற்பத்தி நடைமுறைகள் குறித்த சான்றிதழை வழங்குவதற்கான விண்ணப்பத்தை பிரேசிலின் சுகாதார கட்டுப்பாட்டாளர் "அன்விசா" (ANVISA) நிராகரித்தது. இருப்பினும், ஜூன் 4ம் தேதி, அன்விசா கடுமையான நிபந்தனைகளுடன், குறைந்த அளவு கோவாக்சின் இறக்குமதி மற்றும் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தது.

  25,000 க்கும் மேற்பட்ட கோவாக்சின் தடுப்பூசி பங்கேற்பாளர்கள் மீது நடத்தப்பட்ட தடுப்பூசியின் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. கோவாக்சினின் செயல்திறன் மற்றும் இரண்டு மாத பாதுகாப்பு குறித்த டேட்டாக்களை, ஜூலை மாதத்தில் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு (சி.டி.எஸ்.கோ) சமர்ப்பித்த பின்னர் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை மறுபரிசீலனை செய்வதற்கு இன்னும் 2-4 மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  ஒருவருக்கு, கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டிருந்தால், அவர், அமெரிக்கா நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்களா?

  தற்போதைய சூழ்நிலைகளில் நீங்கள் அமெரிக்காவுக்குச் செல்வதற்கு தடையில்லை. விமானத்தில் ஏறும் முன்பாக, ஆர்டி-பி.சி.ஆர் நெகட்டிவ் ரிப்போர்ட் தேவைப்படுகிறது. நீங்கள் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சேர விரும்பும் மாணவராக இருந்தால், கோவாக்சின் இரண்டு டோஸ்களை போட்டுக் கொண்டதாலேயே உங்களை நாட்டிற்குள் நுழைய விடாமல் தடுப்பார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

  பல பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களுக்கு அமெரிக்காவிற்கு வந்தவுடன் தங்கள் நோய்த்தடுப்பு மருந்துக

  English summary
  The US Food and Drug Administration (FDA) has rejected Bharat Biotech’s proposal for an emergency use authorization (EUA) of its covid vaccine, delaying the company’s vaccine launch in that country. Will denial of US approval for Covaxin stop students going there?
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X