டேன்ஞர்! அடுத்த பெருந்தொற்றை ஏற்படுத்துமா மங்கி பாக்ஸ்? எந்தெந்த நாடுகளில் பாதிப்பு? பகீர் தகவல்
வாஷிங்டன்: மங்கி பாக்ஸ் நோய் பல நாடுகளில் கண்டறியப்படும் நிலையில், இது குறித்து உலக சுகாதார அமைப்பு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பே உலக நாடுகளை ஒரு வழி செய்துவிட்டது. இப்போது தான் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு, அனைத்து நாடுகளும் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.
இந்தச் சூழலில் மங்கி பாக்ஸ் எனப்டும் ஒரு வகை நோய் பரவ தொடங்கி உள்ளது. இது எங்கு அடுத்த அலையை ஏற்படுத்துமோ என்று பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
மங்கிபாக்ஸ் பரவ பாலியல் உறவு முக்கிய காரணமாம்... எச்சரிக்கும் ஆய்வு...கவனம் மக்களே!

எந்தெந்த நாடுகள்
இதுவரை குறைந்தது 12 நாடுகளில் - பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் மங்கி பாக்ஸ் கண்டறியப்பட்டுள்ளது. வரும் கோடைக் காலத்தில் மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடும் நிகழ்ச்சிகள், பார்ட்டிகள் அதிகரிக்கும் என்பதால் மங்கி பாக்ஸ் பரவலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வரும் காலத்தில் மங்கு பாக்ஸ் அதிகரிக்கலாம் என்றும் அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா
மங்கி பாக்ஸ் பரவல் வித்தியாசமானதாகத் தெரிகிறது என்றும் இப்போது மங்கி பாக்ஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவரைத் தவிர மற்ற யாரும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் சமீபத்தில் செல்லாதவர்கள் என்பதால் இது ஆய்வாளர்கள் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. ஐரோப்பாவில் மட்டும் கிட்டத்தட்ட 100 வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மிக மோசம்
ஸ்பெயின் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 24 பேருக்குப் புதிதாக மங்கி பாக்ஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. பொது குளியல் அறையில் இருந்தே அங்கு மங்கி பாக்ஸ் பரவல் ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அந்த குளியல் அறை மூடப்பட்டுள்ளது. இருப்பினும், அப்பகுதியில் தான் மங்கி பாக்ஸ் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. ஐரோப்பாவில் முதலில் ஜெர்மனி நாட்டில் தான் இந்த மங்கி பாக்ஸ் கண்டறியப்பட்டது. ஐரோப்பாவில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய மங்கி பாக்ஸ் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

எப்படிப் பரவும்
பொதுவாக மங்கி பாக்ஸ் என்பது மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவின் வனப்பகுதிகளில் மட்டுமே காணப்படும். ஆர்த்தோபாக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரசால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே மங்கி பாக்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து வெளியேறும் நீர்த்துளிகள் வழியாகவே இந்த நோய் பரவுகிறது. தோல் புண்கள் மற்றும் அசுத்தமான பொருட்கள் மூலமும் இந்த நோய் பரவும்.. மங்கி பாக்ஸ் பாதிப்பு அதிகபட்சம் 21 நாட்கள் வரை இருக்கும். இந்த நோய் ஏற்படுபவர்களுக்கு பெரும்பாலும் 14 முதல் 21 நாட்கள் அறிகுறிகளுடன் கூடிய பாதிப்பு இருக்கும்.

சில வாரங்கள்
கடந்த சில வாரங்களாகவே இந்த வைரஸ் பரவல் இருந்து இருக்கலாம் என்று சுகாதாரத் துறையினர் சந்தேகிக்கிறார்கள். தற்போது கூட கண்டறியப்பட்ட பெரும்பாலான வைரஸ் பாதிப்புகள் நெருங்கிய தொடர்புகளுக்குள் இருப்பவர்கள் மத்தியில் தான் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் தற்போதுள்ள சூழலை வைத்துப் பார்க்கும் போது, இது மிகப் பெரிய பாதிப்பாக ஏற்படும் வாய்ப்புகள் குறைவே என்றே மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அடுத்த கொரோனா
ஆப்பிரிக்க நாடுகளில் தான் இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் இது கொரோனா வைரஸ் போல மிக வேகமாகப் பரவ வாய்ப்புகள் இல்லை, இது நீண்ட கால பாதிப்பாகத் தொடரும் வாய்ப்புகளும் குறைவு. முறையான தடமறிதல், தனிமைப்படுத்துதல், சிகிச்சை ஆகியவை மூலம் இந்த வைரஸ் பரவலை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.