வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சாம்பாரில்" கொட்டி கிடக்கும் நன்மைகள்.. பெருங்குடல் கேன்சரையே தடுக்குமாம்! வியக்கும் அமெரிக்கா

பெருங்குடல் புற்றுநோய் ஆபத்தை சாம்பார் குறைப்பதாக அமெரிக்க மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஒருவருக்குப் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதைச் சாம்பார் எந்தளவுக்குத் தடுக்கிறது என்பது குறித்த ஆய்வுகளின் முடிவுகளை அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் விளக்கியுள்ளார்.

தென்மாநிலங்களில் அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் தினசரி செய்யப்படும் உணவாக உள்ளது சாம்பார். பெரும்பாலானோர் வீடுகளில் மதியம் சாம்பார் இருந்தே தீரும்.

இளம் தலைமுறையினர் வீடுகளில் சமைக்கப்படும் சாம்பார் உள்ளிட்ட உணவுகளைச் சாப்பிடப் பெரியளவில் ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கிடையே சாம்பாரில் எந்தளவுக்கு நன்மை இருக்கிறது என்பதைக் கண்டறியும் வகையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

உயிரே போகும்.! உயிரே போகும்.! "பக்கவாதம்.." இந்த ரத்த பிரிவு இருக்கா உங்களுக்கு.. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்

சாம்பார்

சாம்பார்

தமிழ்நாட்டில் சாம்பார் இல்லையென்றால் பலருக்கு உணவே இறங்காது என்று சொல்லலாம். தோசைகள், இட்லிகள் என்று டிபன் ஐட்டங்கள் தொடங்கி சாதம் வரை சாம்பாரே பலரது முதல் சாய்ஸாக உள்ளது. சைவம் சாப்பிடுவோர் மட்டுமின்றி அசைவ உணவு பிரியர்களுக்கும் பிடித்த ஒரு உணவாகச் சாம்பார் உள்ளது. பருப்பு, காய்கறிகள், கொத்தமல்லி, சீரகம், வெந்தயம், புளித் தண்ணீர் உட்பட சில மசாலாப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவாகச் சாம்பார் உள்ளது. குறிப்பாக இட்லியுடன் சாம்பாரைச் சேர்த்துச் சாப்பிடுவதே தனியொரு ஆனந்தம் தான்.

கேன்சர்

கேன்சர்

தமிழ்நாடு மட்டுமின்றி மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் உணவுகளில் சாம்பார் முக்கிய அங்கம் வகிக்கிறது. இப்படி பலரும் விரும்பி ருசிக்கும் சாம்பாரால் கேன்சரை தடுக்க முடியுமா என்ற ஆய்வை அமெரிக்க ஆய்வாளர் ஆய்வு நடத்தியுள்ளனர். மாறி வரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் முன்பு அரிதாக ஏற்பட்ட கேன்சர் நோய் இப்போது பரவலாக ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனிடையே அமெரிக்க ஆய்வாளர்கள் சாம்பார் பெருங்குடல் கேன்சரை எந்தளவுக்குக் குறைக்கிறது என்பது குறித்து விரிவான ஆய்வை நடத்தியுள்ளனர்.

 எலிகளை வைத்து சோதனை

எலிகளை வைத்து சோதனை

இது தொடர்பாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்த தகவல்கள் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த இரைப்பை குடல் வல்லுநர் டாக்டர் பழனியப்பன் மாணிக்கம் இணையத்தில் பேசியிருந்தார். இந்த முதற்கட்ட சோதனை எலிகளை வைத்து நடத்தப்பட்டுள்ளது. இதில் எலிகளை இரண்டு குழுக்களாகப் பிரித்துள்ளனர். ஒரு குழுவுக்குத் தண்ணீரும் மற்றொரு குழுவுக்குச் சாம்பாரையும் இவர்கள் கொடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து DMH என்ற கேன்சருடன் தொடர்புடைய பொருளையும் வழங்கி ஆய்வாளர்கள் சோதனை செய்துள்ளனர்.

 பெருங்குடல் புற்றுநோய்

பெருங்குடல் புற்றுநோய்

இந்த காலத்தில் ​​​​பெரும்பாலானோர் நார்ச்சத்துள்ள சிநாக்ஸ்களை சாப்பிடவே விரும்பி வரும் நிலையில், இதனால் சர்க்கரை நோய் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், சாம்பார் அதில் இருந்தும் நம்மைக் காப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பழனியப்பன் மாணிக்கம் கூறுகையில், "தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவான சாம்பார், அனைவருக்கும் பிடித்த ஒரு உணவாகவே உள்ளது. இந்த சம்பார் இப்போது ஒரு வகை பெருங்குடல் புற்றுநோயைத் தடுப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

தடுக்கிறது

தடுக்கிறது

சாம்பார் சாப்பிடுவதால் டைமெதில் ஹைட்ரேசினால் ஏற்படும் பெருங்குடல் கேன்சரை தடுப்பது அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடலுக்கு ஆரோக்கியம் தர என்ன மசாலா மற்றும் எந்தளவுக்குப் பருப்பைப் போட்டுச் செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு நடத்தியுள்ளனர். உலகிலேயே அதிக உயிர்களைக் கொல்லும் கேன்சர்களில் இந்த பெருங்குடல் கேன்சர் மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த கொடிய நோயைச் சாம்பார் ஓரளவுக்குத் தடுக்கிறது என்பதே நல்ல ஒரு செய்தியாகும்.

இந்தியர்கள்

இந்தியர்கள்

இந்தியாவில் பெரும்பாலானோர் வீடுகளில் அடிக்கடி செய்யக் கூடிய உணவாகச் சாம்பார் உள்ளது. இதுவும் இந்தியாவில் பெருங்குடல் கேன்சர் அதிகம் ஏற்படாமல் இருக்கக் காரணமாக இருக்கிறது என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான பெருங்குடல் புற்றுநோய்கள் ஏற்பட்ட உணவுப் பழக்கமே காரணம். சுமார் 70% கேஸ்களுக்கு கேன்சர் ஏற்பட உணவுப் பழக்கமே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

English summary
New research says that sambar might saves from colon cancer: New connection between Sambar and colon cancer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X