வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஃபேன் முதல் டாய்லெட் வரை.. எங்கும் பனி கட்டி.. தவிக்கும் அமெரிக்கா! பார்த்தாலே உறைய வைக்கும் படங்கள்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் மின்சாரம் மற்றும் வெயில் வெப்பம் இல்லாத நிலையில் கடும் குளிரோடு போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 3.4 மில்லியன் மக்கள் இதுவரை மின்சாரம் இல்லாமல் தவிக்கிறார்கள். கணிசமானோர் அதாவது சுமார் 70 லட்சம் பேருக்கு குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.

டெக்சாஸில்தான் மிக மோசமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. டெக்சாஸிலிருந்து வெளிவரும் புகைப்படங்கள் உங்களை நடுங்க வைக்கும் அளவுக்கு உள்ளன. ஆம்.. படத்தை பார்த்தே உங்கள் உடல் குளிரால் நடுங்க வாய்ப்பு இருக்கிறது.

மின் விசிறியில் தொங்கும் பனிக் கட்டி

கூரையிலிருந்து தொங்கும் ஐஸ், தண்ணீர் குழாய்களில் இருந்து வெளியேறும் பனி, உறைந்த நீச்சல் குளங்கள் என ஒவ்வொரு போட்டோவும் ஆடிப்போகும் அளவுக்கு இருக்கின்றன. நெட்டிசன்கள் ஷேர் செய்த சில ஜில்லிட வைக்கும் படங்கள் இதோ: வீட்டின் மின் விசிறியில் பனி தொங்கி பார்த்துள்ளீர்களா. இதோ பாருங்கள். மைனஸ் 18 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை போயுள்ள டெக்சாஸ் நிலைமை இது.

நீச்சல் குளம்

டல்லாஸ் பகுதியில் தனது சகோதரி வீட்டு நீச்சல் குளம் தண்ணீர் உறைந்து போய் விட்டதாக இவர் ஷேர் செய்துள்ள படம், நம்மை உறைந்து போக வைத்துவிடும்போல இருக்கிறதே.

டாய்லெட் நிலை

டாய்லெட் கோப்பையிலுள்ள தண்ணீர் கூட உறைந்து போனால், நிம்மதியாக காலைக் கடனை கூட முடிக்க முடியாதே. ஆனால் இதுதான் அமெரிக்க நிலவரம்.

குழாயை திறந்தால்

நம்மூரில் பிப்ரவரி மாதம் கூட பைப்பை திறந்தால் சுடச் சுட தண்ணீர் வரும். ஆனால் அமெரிக்காவில் பனிக் கட்டியாக வருகிறதாம். பாத்திரத்தை எப்படி கழுவது என்று புரியாமல் மக்கள் விழிக்கிறார்கள்.

அமெரிக்கா நிலவரம்

வீட்டு பாத்ரூமிலுள்ள தண்ணீர் உறைந்துபோனால் எப்படி குளிக்க முடியும்? டல்லாஸ் நிலவரம் இப்படி இருக்கிறது. இந்த புகைப்படத்தை பார்த்தால் அமெரிக்க மக்கள் நிலைமை உங்களுக்கே நன்றாக புரியும். உலகின் பணக்கார நாடு, இப்போது குளிக்கவும், காலைக் கடனை முடிக்கவும் கூட சிரமப்படும் நிலையில் இருப்பதைத்தான் இந்த படங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

English summary
Millions of Americans are struggling with severe cold with no electricity and no heat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X