வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்காவை வாட்டும் பனிப்பொழிவு.. 2 அடி உயரத்துக்கு பனி தேங்கும் என எச்சரிக்கை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்:அமெரிக்காவில் அடுத்து வரக்கூடிய நாட்களில் 2 அடி உயரத்துக்கு பனி தேங்கும் வகையில் பனிப்புயல் வீசக்கூடும் என்று எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் நிலவிய மிதமான பனிப்பொழிவால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன் எதிரொலியாக வார விடுமுறை நாட்களில் விமானங்கள் மற்றும் ரயில் சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன.

Winter storm warning issued by u.s. weather prediction center

கிட்டத்தட்ட 100 மில்லியன் மக்கள் வசிக்கும் கிழக்கு அமெரிக்காவில் பனிப் புயலும், அதனை தொடர்ந்து பனிப்பொழிவும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, பனிப்புயலானது கனடாவின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி நகர்ந்து வலுப்பெற்றதாக அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சிகாகோவில் 20 சென்டிமீட்டர் அளவுக்கு பனி படர்ந்து காணப்படுகிறது. தொடரும் பனிப்பொழிவால் நகரில் உள்ள 2 முக்கிய விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் புறப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது.

தொடரும் பனிப்பொழிவால் அரசு அலுவலங்களில் ஊழியர்களின் வருகை குறைந்து, பணிகள் பாதிக்கப்பட்டன. சிகாகோ, வாஷிங்டன் நகரங்கள் கடுமையாக பாதிக்க்ப்பட்டுள்ள நிலையில் நியூ ஜெர்சி, பெனில்வேனியா நகரங்களின் ஆளுநர்கள் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

English summary
Winter storm to hit US northeast with up to two feet of snow says U.S. Weather prediction center.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X