India
  • search
வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காதலித்தது பாய் பிரெண்ட்டை... ஆனால் கரம் பிடித்தது அவரது அப்பாவை! இது பயங்கரமாக இருக்கே

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இளம் பெண் ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த நபரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது,

அமெரிக்காவின் ஓஹியோவைச் சேர்ந்த 27 வயதானவர் சிட்னி டீன். இவர் தன்னை விட பல வயது மூத்த நபரைக் காதலித்து உள்ளார்.

அது காதலாக மட்டும் நில்லாமல் திருமணத்திலும் முடிந்துள்ளது. திருமணம் படங்களையும் தன்னுடைய காதல் கதையையும் அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

 அமெரிக்கப் பெண்

அமெரிக்கப் பெண்

சிட்னி டீன் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கும் போது. தனது காதலரை முதலில் பார்த்துள்ளார். அதுவும் எப்படி தெரியுமா. அப்போது 11 வயதான சிட்னி டீன், அப்போதைய பாய் பிரெண்ட்டை சந்திக்கச் சென்றுள்ளார். அங்கு தான் இந்நாள் காதல் கணவர் பாலை பார்த்துள்ளார். பழைய பாய் பிரெண்ட் வீட்டில் பால் என்ன செய்கிறார் எனக் கேட்கிறீர்களா? அவரது அப்பா தான் இவராம்.

 பிரேக் அப்

பிரேக் அப்

பாலின் மகனும் சிட்னி டீனும் சில காலம் டேட் செய்துவிட்டு பிரந்துவிட்டனர். ஆனால், பாலும் சிட்னியும் தொடர்ந்து நண்பர்களாகவே பழகி வந்துள்ளனர். பிரேக் அப் ஆன பின்னரும் கூட சிட்னி அவரது எக்ஸ் பாய் பிரெண்டை பார்க்க அடிக்கடி அவர்கள் வீட்டிற்குச் செல்வாராம். ஒரு கட்டத்தில் பாலின் மகனுக்கு வேறு ஒரு கேர்ள் பிரெண்ட் கிடைத்து விடவே, சிட்னி மிகவும் சோகமடைந்துவிட்டார்.

 புது ரோமான்ஸ்

புது ரோமான்ஸ்

சரியாக அந்தச் சமயத்தில் தான் சிட்னிக்கு 16 வயது ஆகி உள்ளது. அப்போது தான் அவருக்குப் பால் மீது, அதாவது எக்ஸ் பாய் பிரெண்டின் அப்பா மீது ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருக்கும் ஓஹியோ மாகாணத்தில் பாலியல் ரீதியான உறவை கொள்ள சட்டப்பூர்வ வயது 16 ஆகும். சரியாக சிட்னிக்கும் 16 வயது ஆகவே இருவரும் டேட் செய்யத் தொடங்கி உள்ளனர். இருவருக்கும் இடையே 20 ஆண்டுகளுக்கும் மேல் வயது வித்தியாசம் இருந்தாலும், அது அவர்களுக்கு எந்தவொரு சிக்கலையும் தரவில்லை.

 அது வேற லெவல்

அது வேற லெவல்

இருவருக்கும் இடையே தாம்பத்திய உறவும் சிறப்பாக இருந்ததாம். இதனால் பல ஆண்டுகள் அப்படியே இருவரும் டேட் செய்து வந்துள்ளனர். இதை எல்லாம் சிட்னியே கூறுகிறார். முதலில் பாலை காதலிப்பேன் எனத் துளியும் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று கூறும் சிட்னி, காதலிக்கத் தொடங்கியதும் இவர் மீதான அன்பு குறையவில்லை என்றும் கூறுகிறார்.

 திருமணம்

திருமணம்

இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டார்களாம். திருமணத்தின் சமயத்தில் இரு வீட்டாரையும் இதற்குச் சம்மதம் தெரிவிக்க வைப்பதில் தான் பெரும் போராட்டமே நடந்ததாகவும் சிட்னி கூறுகிறார். இது குறித்து சிட்னி மேலும் கூறுகையில், "பால் யார் என்று என் அம்மாவுக்கு முன்பே தெரியும். இருவரும் நன்றாகவே பேசி பழகி உள்ளனர். இருப்பினும், நாங்கள் உறவில் இருக்கிறோம் என முதலில் அம்மாவிடம் சொன்னபோது, ​​​​அவர் மகிழ்ச்சியாக இல்லை.

 ஒரே பிரச்சினை

ஒரே பிரச்சினை

வயது வித்தியாசம் தான் அவர்களுக்கு முக்கிய பிரச்சினையாக இருந்தது. நாங்கள் ஓராண்டு காத்திருந்தோம். அதன் பின்னரே அவர் சற்று இறங்கி வந்தார். அவர் எங்களை இன்னும் கூட 100% ஒப்புக் கொள்ளவில்லை. இருப்பினும், எங்களை ஏற்றுக் கொண்டதே பெரிய விஷயம் என்றே நினைக்கிறேன். பாலுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் இளைய பையன் எங்களை ஏற்றுக் கொள்வதில் தான் பிரச்சினை இருந்தது. அவரும் சில ஆண்டுகளில் ஏற்றுக் கொண்டான்.

 வயது வித்தியாசம்

வயது வித்தியாசம்

உண்மையில், காதலுக்கு வயது இடைவெளி எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. ஏன் வயது வித்தியாசம் இருக்கும் காதலர்களை இந்த சமூகம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது என எனக்குப் புரியவில்லை. திருமணம் நடந்து பல ஆண்டுகள் ஆகிறது. இப்போதும் கூட நாங்கல் இருவரும் மகிழ்ச்சியாகவே உள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.

English summary
A woman married his father boy friend: (முன்னாள் காதலனின் அப்பாவை திருமணம் செய்த பெண்) Woman having relation with aged men.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X