வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகில் எந்த நாட்டிலும் நிகழாதது.. கொரோனா மரணத்தில் அமெரிக்கா புதிய உச்சம்! ஷாக் தரும் இந்தியா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகில் கொரோனா பாதிப்பால் இதுவரை 974,546 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 205448 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 1,38,159 பேரும், இந்தியாவில் 90,021 பேரும் பலியாகி உள்ளனர்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. உலகில் கொரோனா தொற்றால் 3,17,63,721 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருந்து இதுவரை 2,33,69,315 பேர் மீண்டனர். 974,546 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகில் கொரோனா பாதிப்புடன் 7,419,860 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

World Coronavirus updates: US Passes Grim Milestone of 2 Lakh Coronavirus Deaths

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 70,97,595 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் தான் 205448 பேர் பலியாகி உள்ளனர். முதன்முதலாக கொரோனா நோயால் ஒரு நாட்டில் 2லட்சத்திற்கும் மேல் பலியாகி இருப்பது அமெரிக்காவில் தான். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 138,159 பேரும், இந்தியாவில் 90,021 பேரும் பலியாகி உள்ளனர்.

உலகிலேயே அதிகபட்சமாக நேற்று இந்தியாவில் 80,391 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, பாதிப்பு மட்டுமல்ல மரணமும் இந்தியாவில் தான் நேற்று அதிகம்.
உலகிலேயே அதிகபட்சமாக நேற்று இந்தியாவில் 1,056 பேர் பலியாகி உள்ளனர். அதேநேரம் அமெரிக்காவில் ஒரே நாளில் 946 பேரும், பிரேசிலில் ஒரே நாளில் 809 பேரும் பலியாகி உள்ளனர்.

கொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகி விட்டது - மு க ஸ்டாலின் சாடல் கொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகி விட்டது - மு க ஸ்டாலின் சாடல்

அமெரிக்காவில் 70,97,595 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகபட்சமாக 5,640,496 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் 4,595,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 1,115,810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொலம்பியாவில் 777,537 பேரும், பெருவில் 772,896 பேரும், மெக்சிகோவில் 700,580 பேரும், ஸ்பெயினில் 682,267 பேரும், தென் ஆப்பிரிக்காவில் 663,282 பேரும், அர்ஜெண்டினாவில் 652,174 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Coronavirus live news: Trump calls 200,000 US deaths ‘a shame’; World reports just under two million Covid-19 cases in one week
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X