வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பிடன்- பிரதமர் மோடி உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் உற்சாக வாழ்த்து!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்/டெல்லி: அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்க இருக்கும் ஜனநாயக கட்சியின் ஜோ பிடனுக்கு இந்திய பிரதமர் மோடி மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் உற்சாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பை வீழ்த்தி ஜோ பிடன் வாகை சூடி உள்ளார். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகிறார் தமிழரான- கறுபர் இனத்தவரான கமலா ஹாரிஸ்.

ஜோ பிடனுக்கு மகிழ்ச்சி பொங்க வாழ்த்து சொல்லும் கமலா ஹாரிஸ் வீடியோ- செம வைரல்ஜோ பிடனுக்கு மகிழ்ச்சி பொங்க வாழ்த்து சொல்லும் கமலா ஹாரிஸ் வீடியோ- செம வைரல்

World leaders congratulate US New President Joe Biden

பிரதமர் மோடி ஜோ பிடன், கமலா ஹாரிஸ் இவருக்கும் வாழ்த்து தெரிவித்து தனித் தனி ட்வீட்டுகளை வெளியிட்டுள்ளார். அதில், துணை அதிபராக இருந்த காலத்தில் அமெரிக்கா- இந்தியாவின் உறவை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியதை நினைவு கூர்ந்தார் மோடி.

கமலா ஹாரிஸுக்கான வாழ்த்தில், உங்களது சித்திகளை மட்டுமல்ல அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கும் பெருமையை அளித்திருக்கிறீர்கள் என கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா வெளியிட்ட அறிக்கையில், ஜோ பிடன் - கமலா ஹாரிஸ் இருவரையும் வாழ்த்தியுள்ளார்.

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமது ட்விட்டர் பக்கத்தில் ஜோ பிடன், கமலா ஹாரிஸ் இருவருக்கும் வாழ்த்துகள் என பதிவு செய்திருக்கிறார். மேலும் நமது இருநாடுகளும் மிக நெருங்கிய அண்டை நாடுகள்- நட்பு சக்திகள். இருநாடுகளும் இணைந்து செயல்படுவோம் எனவும் ட்ரூடோ கூறியுள்ளார்.

World leaders congratulate US New President Joe Biden

அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்டின் ஜோ பிடனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ஜோ பிடனின் மூதாதையர்கள் அயர்லாந்தை சேர்ந்தவர் என்றும் மார்ட்டின் சுட்டிக்காட்டி பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.

அயர்லாந்தின் சுகாதார துறைஅமைச்சர் சிமன் வோவெனி, பிரான்சின் பாரீஸ் நகர மேயர் ஆன்னி ஹிடால்கோ, இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர் யார் லேபிட் உள்ளிட்டோரும் ஜோ பிடனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

English summary
World leaders congratulate US New President Joe Biden.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X