வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காட்டுத் தீ போல பரவும் கொரோனா.. உலகம் முழுக்க.. வெறும் 100 மணி நேரத்தில் 10 லட்சம் பேருக்கு பாதிப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகளவில் வெறும் 100 மணி நேரத்தில் 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் முதலில் பரவிய நாடான சீனாவில் கூட 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட 3 மாதங்கள் பிடித்தன. உலகம் முழுக்க இதுவரை 1 கோடியே 40 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. இது உலக சுகாதார அமைப்புக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. பல அறிவுரைகளை சொன்னாலும் அவற்றை பல நாடுகள் கேட்பதில்லை என ஹு வேதனை தெரிவித்தன.

இந்த நிலையில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.4 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது ஜூலை 13 ஆம் தேதி 1.3 கோடியாக இருந்த இந்த பாதிப்பு வெறும் 100 மணி நேரத்தில் 1.4 கோடியாக அதாவது 10 லட்சம் கேஸ்கள் உயர்ந்துள்ளது.

மதுரை- 263 ; விருதுநகர் 196; தேனி- 175; திண்டுக்கல் 160- தென் தமிழகத்தில் கொரோனா தாண்டவம் மதுரை- 263 ; விருதுநகர் 196; தேனி- 175; திண்டுக்கல் 160- தென் தமிழகத்தில் கொரோனா தாண்டவம்

மருத்துவ நிபுணர்கள்

மருத்துவ நிபுணர்கள்

முதல்முறையாக இது போன்ற எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கவலைத் தெரிவிக்கிறார்கள். ஜனவரி மாதம் முதன்முதலில்கொரோனா வைரஸ் பரவிய சீனாவில் கூட 10 லட்சம் பாதிப்புகளை அடைய 3 மாதங்கள் எடுத்துக் கொண்டது.

நாடுகள்

நாடுகள்

ஆனால் சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு பரவிய இந்த வைரஸ் உலகளவில் வெறும் 100 மணி நேரத்தில் 10 லட்சமாக உயர்ந்தது கவலைக்குரிய விஷயமாகும். சமூக பரவலாக இந்த தொற்று மாறிவிட்டதா என்பதை அந்தந்த நாடுகள் கண்டறிய வேண்டியது அவசியமான ஒன்று என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

கொரோனா

கொரோனா

அமெரிக்காவில் கொரோனாவின் முதல் அலையிலேயே 36 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை அன்று ஒரே நாளில் 77 ஆயிரத்திற்கு மேலான புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன. ஸ்வீடனில் கொரோனாவின் மொத்த பாதிப்பே 77,281 ஆகும்.

Recommended Video

    Russia finishes Clinical Trial for Corona Vaccine
    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ்

    ஜனவரி மாதம் 10-ஆம் தேதி சீனாவில் கொரோனா பரவியதை தொடர்ந்து ஐரோப்பா, அமெரிக்காவில் உயர்ந்தது. ஆனால் தற்போது உலக கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் பாதிக்கு பாதி எண்ணிக்கையை அமெரிக்கா பெற்றுள்ளது. இதன் மூலம் இங்கு நோய் வேகமாக பரவுகிறது என்பதையே காட்டுகிறது.

    World records 1 million corona cases in 100 hours

    English summary
    World records 1 million corona cases in 100 hours from July 13.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X