வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகில் கொரோனாவால் எந்தெந்த நாடுகளில் உயிரிழப்பு.. பாதிப்பு மிக அதிகம்.. அமெரிக்காவில் புதிய உச்சம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. வெறும் இரண்டு வாரத்தில் மட்டும் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதேபோல் வெறும் 3 வாரத்தில் ஒரு லட்சம் பேர் கொரோவால் பலியாகி உள்ளனர். உலகிலேயே கொரோனாவால் அமெரிக்கா மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பும், பாதிப்பும் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

Recommended Video

    கொரோனா அச்சுறுத்தல்... அமெரிக்க உணவகங்களில் செய்யப்படும் மாற்றங்கள்

    சீனாவில் முதன்முதலாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் சுமார் 195 நாடுகள் பல்வேறு தன்னாட்சி பிரதேசங்களில் பாதித்துள்ளது. இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டு வெறும் 150 நாளுக்குள் சுமார் 47 லட்சம் பேரை பாதித்துள்ளது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,19,631 ஆக அதிகரித்துள்ளத.

    worldwide corona cases update: which countries have the most cases and deaths?

    உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,13,212 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,11,611 ஆக அதிகரித்துள்ளது.

    உலகிலேயே கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. அங்கு பாதிப்பும் பலி எண்ணிக்கையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,507,773 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல்அமெரிக்காவில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 113 ஆக உயர்ந்துள்ளது.

    லாக்டவுன் 4.0, எத்தனை நாட்கள் நீட்டிப்பு.. இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறது மத்திய அரசு லாக்டவுன் 4.0, எத்தனை நாட்கள் நீட்டிப்பு.. இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறது மத்திய அரசு

    அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1218 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 23488 பேருக்கு தொற்று பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    worldwide corona cases update: which countries have the most cases and deaths?

    அமெரிக்காவை அடுத்து இங்கிலாந்தில் 34466 பேரும், இத்தாலியில் 31763 பேரும், பிரான்சில் 27625 பேரும், ஸ்பெயினில் 27563 பேரும், பிரேசிலில் 15633 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். உலகிலேயே கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டும் உயிரிழப்பு மிக குறைவாக உள்ள நாடு ரஷ்யா ஆகும்.அங்கு 272 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு என்பது வெறும் 2537 ஆக உள்ளது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பத 90 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழப்பு 2800ஐ கடந்துள்ளது.

    English summary
    Covid-19 has spread around the world, which countries have the most cases and deaths?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X