வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனவெறியை தூண்டும் வீடியோகளுக்கு தடை... யூடியூப் நிறுவனம் அதிரடி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இனவெறியை தூண்டும் வீடியோக்களை தடை செய்வதாக யூடியூப் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஒரு இனம் உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்பது போன்ற இனவெறி மிகுந்த வீடியோக்கள் அதிகம் வலம் வருகின்றன. இந்த வீடியோக்களுக்கு தடை விதிப்பதாக யூடியூப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

YouTube has been banned for violating racial harassment

யூடியூப் நிறுவனம் வெறுப்பு பேச்சுகளுக்கு எதிரான கொள்கையை எப்போதுமே கொண்டிருப்பதாக அந்த நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மக்களிடையே பாகுபாட்டை உருவாக்கும் ஒரு இனம் உயர்ந்தது என்பது போல் சித்தரிக்கும் வீடியோக்களை முற்றிலும் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யூடியூப் தெரிவித்துள்ளது.

உடனடியாக அமலுக்கு வந்திருக்கும் இந்த நடவடிக்கையை முழுமையாக செய்து முடிக்க சில மாதங்கள் ஆகலாம். இருப்பினும், படிப்படியாக முழுவதுமாக அமலுக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது.

பாரீர் பாரீர்.. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி கட்டாயம்.. லிஸ்ட் வெளியிட்ட எச். ராஜா!பாரீர் பாரீர்.. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி கட்டாயம்.. லிஸ்ட் வெளியிட்ட எச். ராஜா!

நியூசிலாந்து மசூதிகளில் நடைபெற்ற தாக்குதல் நேரலையாக யூடியூபில் ஒளிபரப்பானதையடுத்து, உலக தலைவர்கள் சமூக வளைத்தளங்கள் மூலம் பரவும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து பல்வேறு சமூக வலைத்தளங்கள் தாமாக முன்வந்து இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான 90% வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடிக்கு யூடியூப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மார்ஃபிங் செய்த ஒரு சில வீடியோக்கள் மட்டுமே இருக்கிறது என்றும் யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரத்தில் திருநாவுக்கரசு இல்லத்தில் பெண்ணை கொலை செய்து புதைத்ததாக ஆடியோ பரவியது. இது குறித்த விசாரணை தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் மீண்டும் முகநூல் மற்றும் யூடியூப் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தனர். வீடியோவை பதிவு செய்தவரின் தகவலை பெற இமெயில் மூலம் கடிதம் அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல், இந்திய விமானி அபிநந்தன் தொடர்பான, 11 வீடியோ காட்சிகளை உடனடியாக நீக்குமாறு யூடியூப் நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதனை ஏற்றுக் கொண்ட யூடியூப் நிறுவனம், அந்த வீடியோ காட்சிகளை நீக்கியது. சட்டப்படி விடுக்கப்படும் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது எங்கள் கொள்ளையாக உள்ளது என்று யூடியூபின் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

English summary
The ban on racist videos, The YouTube Company Action
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X