வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பேஸ்புக், ட்விட்டரை தொடர்ந்து... டிரம்புக்கு எதிராக திரும்பிய யூடியூப்... டிரம்ப் சேனல் முடக்கம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி டிரம்ப் வெளியிட்ட வீடியோ ஒன்றை நீக்கியுள்ள யூடியூப், அவரது சேனலையும் ஒரு வாரம் முடக்குவதாக அறிவித்துள்ளது.

கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப், தனது ஆதரவாளர்களுடன் உரையாட பெரும்பாலும் சமூக ஊடகங்களையே பயன்படுத்தினார். தொலைக்காட்சிகள் போலி செய்திகளைப் பரப்புவதாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்த டிரம்ப், சமூக வலைத்தளங்களையே தனது பிரச்சாரத்திற்குப் பெரிதும் நம்பிவந்தார்.

இருப்பினும், அதிபர் தேர்தலில் டிரம்பால் வெற்றி பெற முடியவில்லை. இதையடுத்து ஜோ பைடனின் வெற்றி செல்லாது என அறிவிக்க டிரம்ப் பல முயற்சிகளை எடுத்தார். ஆனால், அதுவும் பலனளிக்கவில்லை.

டொனால்ட் டிரம்ப் பதவி நீக்க தீர்மானம்- இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு டொனால்ட் டிரம்ப் பதவி நீக்க தீர்மானம்- இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு

நாடாளுமன்றத்தில் வன்முறை

நாடாளுமன்றத்தில் வன்முறை

இறுதி முயற்சியாக ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வில் தனது ஆதரவாளர்களைப் பயன்படுத்தி, குழப்பத்தை ஏற்படுத்தவும் டிரம்ப் முயன்றார். அப்போது ஏற்பட்ட வன்முறையில், ஒரு காவலர் உட்பட ஐவர் உயிரிழந்தனர். மேலும், இந்த வன்முறைச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று டிரம்ப் பதவி விலக வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

யூடியூப் சேனல் முடக்கம்

யூடியூப் சேனல் முடக்கம்

இந்நிலையில், வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி டிரம்ப் வெளியிட்ட வீடியோ ஒன்றை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது. இதே காரணத்திற்காக அவரது யூடியூப் சேனலையும் ஒரு வாரம் முடக்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், வன்முறை ஏற்படுவதைத் தடுக்க டிரம்பின் சேனலில் கமெண்ட் செய்யும் ஆப்சன் முற்றிலுமாக முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தள பக்கங்கள் முடக்கம்

சமூக வலைத்தள பக்கங்கள் முடக்கம்

முன்னதாக, ஏற்கனவே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிரமில் டிரம்பின் பக்கம் முடக்கப்படுவதாக மார்க் ஜூக்கர்பெர்க் அறிவித்திருந்தார். அதேபோல ஸ்னாப்சாட் மற்றும் ட்விட்ச் தளங்களும் டிரம்பின் பக்கங்களை முடக்கின. இதன் காரணமாக டிரம்ப், தனது ஆதரவாளர்களுடன் உரையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

டிவிட்டருக்கு எதிராகக் கொந்தளிக்கும் டிரம்ப் ஆதரவாளர்கள்

டிவிட்டருக்கு எதிராகக் கொந்தளிக்கும் டிரம்ப் ஆதரவாளர்கள்

குறிப்பாக, டிவிட்டர் நிறுவனம் அதிபர் டிரம்ப், அவரது பிரச்சார குழு ஆகிய பக்கங்களை நிரந்தரமாக முடக்குவதாகக் கடந்த வாரம் அறிவித்தது. இது டிரம்ப் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பெரும் டெக் நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை டிரம்ப் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Google-owned YouTube on Tuesday temporarily suspended President Donald Trump's channel and removed a video for violating its policy against inciting violence, joining other social media platforms in banning his accounts after last week's Capitol riot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X