டக்குனு அமர்ந்த எச்.ராஜா.. சொன்னபடி பல்லக்கை தூக்கிய அண்ணாமலை.. அட பக்கத்துல யாருன்னு பார்த்தீங்களா?
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் நேற்று இரவு பட்டின பிரவேசத்தை ஒரு பகுதியாக பல்லக்கில் சென்று வழிபாடு செய்தார்.
தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியருக்கு பல்லக்கு தூக்கும் விழாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் தடை விதிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
3 மேட்டர்.. 3 பேருக்கு சிக்கல்.. ஊட்டியில் ரெய்டு விட்ட ஸ்டாலின்.. மேசைக்கு வந்த முக்கிய ரிப்போர்ட்!
இந்த தடையை பல இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. இப்படி பல்லக்கில் செல்லும் நிகழ்வை பட்டின பிரவேசம் என்பார்கள். இதற்கு தடை விதிக்கப்பட்டது பாஜக, இந்து முன்னணி போன்ற அமைப்புகள் காட்சிகள் இடையே கடும் எதிர்ப்பை சந்தித்தது. இதையடுத்து கடும் எதிர்ப்பை தொடர்ந்து தடை வாபஸ் வாங்கப்பட்டது.

பல்லக்கு தூக்கும் நிகழ்வு
இந்த நிலையில் நேற்று திட்டமிட்டபடி பல்லக்கு தூக்கும் நிகழ்வு நடைபெற்றது. ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் உடலில் பல்வேறு ஆபரணங்களை அணிந்து கொண்டு பல்லக்கில் வலம் வந்தார். அவரை சுற்றி சீவிகைகள் வீசப்பட்டன. சுமார் 65-70 பேர் இந்த பல்லக்கை சுமந்து சென்றனர். பாரம்பரியமாக பல்லக்கு சுமக்கும் ஊழியர்கள் பல்லக்கை சுமந்து சென்றனர். பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை இந்த பல்லக்கை சுமப்பதாக இருந்தார்.

அண்ணாமலை பல்லக்கு
அதன்படியே நேற்று அண்ணாமலை முதல் ஆளாக வரிசையில் நின்று பல்லக்கை சுமந்தார். தோள் மீது பல்லக்கை வைத்து மற்ற ஊழியர்களுடன் சேர்ந்து பல்லக்கை சுமந்து சென்றனர். நான்கு வீதிகள் வழியாக பல்லக்கு சென்றது. நான்கு வீதிகளிலும் அண்ணாமலை பல்லக்கை சுமந்து சென்றார். அதன்பின் ஆதீனத்துடன் அண்ணாமலை சந்திப்பு நடத்தினார்.

ஆதீனம்
இந்த சந்திப்பில் அண்ணாமலைக்கு ஆதீனம் சார்பில் கடவுள்கள் சிலை அடங்கிய போட்டோ பிரேம் ஒன்று வழங்கப்பட்டது. அப்போது எச். ராஜா அருகில் நின்று இருந்தார். அவரை அமரும் படி ஆதீனம் சொல்ல உடனே அவரும் அமர்ந்தார். அண்ணாமலை அருகே தரையில் அமர்ந்து இருந்த எச். ராஜாவிற்கு பொன்னாடை கொடுக்கப்பட்டது. பச்சை நிற பொன்னாடை கொடுக்கப்பட்ட பின் அவருக்கு சாமி சிலை அடங்கிய பிரேம் வழங்கப்பட்டது.

எச். ராஜா
இந்த நிலையில் எச். ராஜாவிற்கு அருகிலேயே சென்னையை சேர்ந்த ஒரே பாஜக கவுன்சிலரான உமா ஆனந்தன் இருந்தார். அவரையும் அமரும்படி ஆதீனம் சொல்ல அவரும் அங்கேயே அமர்ந்து ஆதீனத்திடம் பேசினார். கோட்சே குறித்து சர்ச்சையான கருத்துகள் கூறியவர் உமா ஆனந்தன். ஆதீனம் நிகழ்வில் பாஜக நிர்வாகிகள் இன்னும் பலர் கலந்து கொண்டனர். இவர்கள் மூவரும் ஆதீனத்துடன் இருக்கும் புகைப்படம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.