For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லஞ்சம் சர்ச்சை.. எடியூரப்பா டைரியை நீதிமன்றம் ஏற்காது.. சட்ட வல்லுநர்கள் கருத்து

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக உயர்மட்ட தலைவர்களுக்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கோடிக்கணக்கில் பணம் வழங்கியதாக சிக்கிய டைரி ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படாது என்று கூறப்படுகிறது.

பாஜக உயர்மட்ட தலைவர்களான ராஜ்நாத்சிங், எல்.கே.அத்வானி, நிதின்கட்கரி உள்ளிட்டோருக்கு, கர்நாடக முதல்வராக இருந்த போது, எடியூரப்பா 1,800 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், எடியூரப்பாவின் டைரி தொடர்பாக லோக்பால் விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பதற்றத்திற்கு இடையே இம்ரான் கானுக்கு மோடி கடிதம்.. காங்கிரஸ் கண்டனம் பதற்றத்திற்கு இடையே இம்ரான் கானுக்கு மோடி கடிதம்.. காங்கிரஸ் கண்டனம்

காங்கிரஸ் கேள்வி

காங்கிரஸ் கேள்வி

எடியூரப்பாவின் கையெழுத்து அடங்கிய டைரி 2017-ம் ஆண்டிலிருந்து வருமான வரித்துறையிடம் உள்ளது என்றும் இதுகுறித்து ஏன் இதுவரை விசாரணை நடைபெறவில்லை என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

திவாலான யோசனை

திவாலான யோசனை

வருமான வரித்துறை டைரி விவகாரம் தொடர்பாக பதிலளித்துள்ள எடியூரப்பா, காங்கிரஸ் தலைவர்களின் திவாலான யோசனை இது என கூறியுள்ளார். இந்தநிலையில், ஜெயின் ஹவாலா வழக்கை உதாரணம் காட்டி, எடியூரப்பாவின் டைரியை நீதிமன்றம் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாது என சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சான்றாக இருக்காது

சான்றாக இருக்காது

இந்திய ஆதாரச் சட்டத்தின் பிரிவு 34 இன் கீழ், வியாபாரத்தில் உள்ளவர்கள் வழக்கமாக வைத்திருக்கும் கணக்கு புத்தகத்தில் உள்ள பதிவுகளை, நீதிமன்றம் விசாரிக்க பொருத்தமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் அத்தகைய பதிவுகள், எந்தவொரு தனி நபருக்கும் பொருத்தமான, போதுமான சான்றாக இருக்காது என சொல்லப்படுகிறது.

ஜெயின் ஹவாலா வழக்கு

ஜெயின் ஹவாலா வழக்கு

மேலும், பல்வேறு வழக்குகளில் டைரிகள் மற்றும் துண்டு சீட்டுகளை உச்சநீதிமன்றம் சான்றுகளாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் விளக்கமளித்துள்ள சட்டவல்லுநர்கள், எல்.கே. அத்வானி மற்றும் வி.சி சுக்லா ஆகியோருக்கு எதிரான ஜெயின் ஹவாலா வழக்கில் மார்ச் 2, 1998 ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உதாரணமாக தெரிவித்துள்ளனர்.

English summary
Yeddyurappa pay off: Diary will not be accepted as evidence
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X