For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Papanasam Dam Water Level Today | பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று

Google Oneindia Tamil News

Newest First Oldest First
9:50 AM, 14 Jun

நேற்றைய நிலவரப்படி, பாபநாசம் அணையின் நீர்மட்டம் 131.10 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,114.70 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக, வினாடிக்கு 1,204.75 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
9:59 AM, 23 Dec

143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 142.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,846 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,862 கன அடி தண்ணீ்ர் திறந்து விடப்பட்டு உள்ளது.
10:10 AM, 18 Dec

143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 141.20 அடியாக இருந்தது. அந்த அணை விரைவில் நிரம்பும் தருவாயில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,504 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நிரம்புவதற்கு 1.80 அடி நீர்மட்டம் தண்ணீரே தேவைப்படுகிறது.
9:57 AM, 18 Nov

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணைப்பகுதியில் 138 மில்லி மீட்டர் மழை கொட்டியது. இதனால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 101.50 அடியாக இருந்தது. இது நேற்று 111.20 அடியாக அதிகரித்து இருந்தது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 120 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
10:11 AM, 17 Nov

நேற்றைய நிலவரப்படி, பாபநாசம் அணை நீர்மட்டம் 100.80 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,242 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,389 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
12:22 PM, 21 Sep

பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று காலையில் 82.40 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,454 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,404 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
5:34 PM, 13 Jan

பாபநாசம் அணை நீர்மட்டம் - [27-12-2019]

டிசம்பர் 27 2019 நிலவரத்தின் படி 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 142.65 அடியாக இருந்தது. பிசான சாகுபடி பணிகள் மும்முரம் காரணமாக, தொடர்ந்து 30 நாட்களாக முழு கொள்ளளவில் நீடித்து இருந்தது பாபநாசம் அணை.

பாபநாசம் அணை வரலாறு:

பாபநாசம் மலையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1942 ஆம் ஆண்டு கட்டப்பட்டது இந்த பாபநாசம் அணை. இவ்வணை 'தாமிரபரணி ஆறு' அணை என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு சொல்லப்போனால் இரண்டு அணைகள் உள்ளன. மேல் அணைக்கு கரையார் அணை என்றும் கீழ் அணைக்கு பாபநாசம் அணை என்றும் சொல்லுவர்.

எங்கு உள்ளது பாபநாசம் அணை?

தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலியிலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் இருக்கிறது இந்த பாபநாசம் அணை. இவ்வணை திருநெல்வேலி மாவட்டம் மற்றும் சுற்றுபுற மக்களுக்கு உதவியாய் இருக்கும் ஒரு முக்கிய அணையாகும். ஏனெனில் இந்த அணை மூலமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன . மேலும் இந்த பாபநாசம் அணையின் மூலம் கிடைக்கும் தண்ணீர் , திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் விருதுநகர் ,தென்காசி ஆகிய முக்கிய ஊர் மக்களுக்கு ஆண்டு முழுவதுக்குமான குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.

எந்த ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது பாபநாசம் அணை?

பாபநாசம் அணை (Papanasam Dam) என்பது தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கட்டு ஆகும். இதன் மூலம் இவ்விரு மாவட்டங்களும் பாசன வசதி பெறுகின்றன.

பாபநாசம் அணை முழு கொள்ளளவு விவரம்:

பாபநாசம் அணையில் 143 அடி வரை நீரைத் தேக்க இயலும். இவ்வணையின் முழு கொள்ளளவு 5,500 மில்லியன் கன அடி.

பாபநாசம் அணை வானிலை:

ரம்மியமான இயற்கை சூழலின் மத்தியில் இந்த பாபநாசம் அணை அமைந்துள்ளதால் இங்கு இதமான குளிர் காற்று எப்போதும் வீசும். சில சமயங்களில் குறைந்தளவு தண்ணீர் இருந்தாலும் கூட குளிர்ச்சியான காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகள் வருகை எப்பொழுதும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும்.

பாபநாசம் அணை - அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்:

சிவன் கோயில், சொரிமுத்து அய்யனார், அகத்தியர் அருவி, களக்காடு முண்டன்துறை புலிகள் சரணாலயம், சேர்வலாறு அணை, காரையார் அணை, மணிமுத்தாறு அணை, குற்றாலம், திருநெல்வேலி, கடனாநதி அணை ஆகிய சுற்றுலா தளங்கள் பாபநாசம் அணைக்கு அருகே அமைத்துள்ளது.

பாபநாசம் அணை - பார்வையிடும் நேரம்:

பாபநாசம் அணையை பார்வையிட சுற்றுலாப்பயணிகளுக்கு அனைத்து வார நாட்களிலும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு நுழைவு கட்டணமாக எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதியும் இங்கு செய்யப்பட்டுள்ளது.

Papanasam Dam Water Level Today
English summary
Papanasam Dam Water Level Today: Check complete details on Papanasam Dam Water Level, History, Weather, Visit Timings, Nearby Places to Visit and more interesting facts on Papanasam Dam. பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரம், முழு கொள்ளளவு, வரலாறு, வானிலை, என பாபநாசம் அணை தொடர்பான தகவல்களை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X