இந்திய சினிமாவின் ரூ.1000 கோடி திரைப்படங்கள்.. என்னென்ன? ஒரு பார்வை!
இந்திய சினிமா ஹாலிவுட் தரத்தில் இருக்கவேண்டும், உலகம் மக்கள் கொண்டாடும் படமாகவும் இருக்கவேண்டும் என்பதால் பல கோடி ரூபாய் தயாரிப்பில் பிரமாண்ட படங்கள் உருவாக்கப்படுகின்றன. அப்படி உருவாக்கப்படும் படங்களின் திரைக்கதை மக்களை ஈர்க்கும் பட்சத்தில் ரூ.1000 கோடி கலெக்ஷனை அசால்ட்டாக எட்டிவிடுகிறது. அந்த வகையில் இந்தியளவில் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியாவில் 1000 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் அமீர் கான் நடிப்பில் வெளிவந்த 'தங்கல்'. மல்யுத்த விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம், பான் இந்தியா அளவில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை செய்தது. தியேட்டரில் ரிலீஸாகி ஒரே ஆண்டில் சுமார் 2,070 கோடி ரூபாய் வசூல் செய்து மெகா சாதனை படைத்தது. இன்றும் இப்படத்தின் வசூல் சாதனை முறியடிக்கப்படாமலே உள்ளது.
தங்கல் படத்தை தொடர்ந்து இரண்டாவதாக 1000 கோடி கிளப்பில் இணைந்த திரைப்படம் 'பாகுபலி 2'. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் ரிலீஸாகி மெகா வெற்றி கண்டது. அதன்படி அப்படம் 1,788 கோடி ரூபாய் வசூல் செய்து மெகா ஹிட்டானது. இருப்பினும் தங்கல் பட வசூல் சாதனையை முறியடிக்க தவறியது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா, பான் இந்தியா அளவில் மாபெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இரண்டாம் பாகம் ரிலீசாகி விமர்சனத்திலும், வசூலிலும் அமோக வரவேற்பு பெற்றது. அந்த வகையில் பான் இந்தியா அளவில் ரிலீஸான இப்படம், 1,740 கோடி ரூபாய் வசூல் செய்தது.
பாகுபலி படத்தை ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த மற்றுமொரு பிரமாண்ட திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் ரிலீஸாகி செம ஹிட்டானது. ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிறந்த பாடலுக்கு ஆஸ்கர் விருது வென்ற இப்படம், 1,230 கோடி ரூபாய் வசூல் செய்தது.
கேஜிஎஃப் முதல் பாகம் கன்னடத்தில் மெகா ஹிட்டானதை தொடர்ந்து இரண்டாம் பாகம் பான் இந்தியா அளவில் ரிலீசாகி ஹிட்டானது. விஜய்யின் 'பீஸ்ட்' படத்துடன் போட்டிபோட்டு ரிலீஸான இப்படம், உலகாவில் சுமார் 1,245 கோடி ரூபாய் வசூல் செய்தது.
ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஹிந்தி திரைப்படம் ஜவான். அட்லீ இயக்குநராக ஹிந்தியில் நெற்றி கொடுத்த படமாகும். நாயகியாக நயன்தாரா, வில்லனாக விஜய் சேதுபதி நடித்தனர். இப்படம், பான் இந்தியா அளவில் ரிலீஸாகி 1,160 கோடி ரூபாய் வசூல் செய்தது.
ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த மற்றொமொரு சூப்பர் ஹிட் திரைப்படம் 'பதான்'. ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். இந்த மெகா ஹிட் பான் இந்தியா படத்தை 1,055 கோடி ரூபாய் வசூல் செய்தது.
பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல், தீபிகா படுகோன் உட்பட பல முன்னணி பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த பான் இந்தியா திரைப்படம் 'கல்கி ஏடி 2898'. கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம், உலகாவில் சுமார் 1,042 கோடி ரூபாய் வசூல் செய்தது.
ரன்வீர் சிங் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த ஆக்ஷன், திரில்லர் திரைப்படம் 'துரந்தர்'. ஹிந்தியில் மட்டும் ரிலீசான இப்படம், 800 கோடி ரூபாய் வசூலை கடந்து 1000 கோடி வசூலை நோக்கி பயணித்து வருகிறது. விரைவில் 1000 கோடி கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications