2025-ன் முதல் பாதியில்.. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸான தமிழ் படங்கள்.. என்னென்ன? முழு லிஸ்ட் இதோ!
2025ம் ஆண்டு முதல் பாதியில் எத்தனையோ தமிழ் படங்கள் ரிலீசாகி சினிமா ரசிகர்களை ஈர்த்துள்ளது, அதில் சில வெற்றி படங்களும் உண்டு, சில பிளாப் படங்களும் உண்டு. தியேட்டரில் ரிலீசான படங்கள் ஒரு சில மாதங்களிலேயே ஓடிடியில் வெளியாவது வழக்கம். இன்னும் சொல்லப்போனால் படம் தியேட்டரில் ரிலீசாகும் முன்னே ஓடிடி நிறுவனங்கள் அப்படங்களை வாங்கிவிடுகின்றன. அந்த வகையில் இதுவரை ரிலீசான படங்களில் என்னென்ன படங்கள் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன், நித்யா மேனன் நடிப்பில் ஜனவரி 14ம் தேதி வெளியான திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'. ஆண் துணையில்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார் நித்யா மேனன், திருமணத்தில் ஆர்வம் காட்டாத ரவி மோகன், இருவரும் நண்பர்களாகிறார்கள். வெவ்வேறு எண்ணங்கள் கொண்ட இருவர் எப்படி ஒன்றிணைகின்றனர் என்பதே இப்படத்தின் கதைக்களம். ரசிகர்களின் நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'விடாமுயற்சி'. ஆக்ஷன், க்ரைம், திரில்லர் ஜானரில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் வசூலில் இப்படம் தோல்வி படமாக பார்க்கப்படுகிறது. இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் காணலாம்.
2025ம் ஆண்டின் முதல் பாதியில் வெளியான சூப்பர் ஹிட் படங்களில் நம்பர் ஒன் இடத்தில் டிராகன் உள்ளது. குறைத்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது. இந்த சூப்பர் ஹிட் படம் நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
இளங்கோ ராமநாதன் இயக்கத்தில் வைபவ், ரெடின் கிங்ஸ்லி, சாந்தினி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அடல்ட் காமெடி திரைப்படம் 'பெருசு'. முழுக்க முழுக்க இரட்டை அருத்த வசனங்கள் கொண்ட இப்படம் இளைஞர்கள் கூட்டத்தை அதிகம் ஈர்த்து. நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியாகி அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்த்தது.
இயக்குநர் சஷிகாந்த் இயக்கத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் 'டெஸ்ட்'. தாய்மைக்காக ஏங்கும் நயன்தாரா, ஆராய்ச்சியாளராக தன்னை நிரூபிக்க துடிக்கும் மாதவன், கிரிக்கெட் விளையாட்டில் தன்னை நிரூபிக்க துடிக்கும் சித்தார்த், இப்படி ஒவ்வொருவரின் லட்சியம் நிறைவேறியதா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதைக்களம். இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
அஜித் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் தியேட்டரில் ரிலீசான திரைப்படம் 'குட் பேட் அக்லி'. முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காக செம ஜாலியாக எடுக்கப்பட்ட இப்படம் அமோக வரவேற்பு பெற்றது. வசூலிலும், விமர்சனம் ரீதியாகவும் இப்படம் செம ஹிட்டானது. நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியான இப்படத்தை இன்னும் பார்க்கவில்லை என்றால் இந்த வீக் எண்டு பார்க்க மறந்துடாதீங்க.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான திரைப்படம் 'ரெட்ரோ'. அதிரடி கேங்ஸ்டர் கதைக்களத்தில் வெளியான இப்படம் அமோக வரவேற்பு பெற்றது. 65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து அசத்தியது. நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா உள்ளிட்ட ஸ்டார் நடிகர்கள் நடிப்பில் கடந்த ஜூன் 5ம் தேதி தியேட்டரில் வெளியான திரைப்படம் 'தக் லைஃப்'. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்று. இது மணிரத்னம் படமே இல்லை? என ரசிகர்கள் கமெண்ட் செய்தனர். வசூலிலும், விமர்சனம் ரீதியாகவும் பிளாப் ஆன இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் முன்கூட்டியே ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications