2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள்.. என்னென்ன? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்?
2025ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் என்னென்ன? அப்படங்களை எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் 10ம் இடத்தில் 'Mahavatar Narsimha' திரைப்படம் உள்ளது. இந்தியாவில் அதிகம் வசூல் செய்த அனிமேஷன் திரைப்படம் என்ற சாதனையும் படைத்துள்ளது. சினிமா ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்பட்ட இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் காணலாம்.
கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் 9ம் இடத்தில் 'Mrs' திரைப்படம் உள்ளது. மலையாளத்தில் வெளிவந்த தி கிரேட் இந்தியன் கிட்சன் படத்தின் ஹிந்தி ரீமேக் படமாகும். நல்ல வரவேற்பு பெற்ற இப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த ஆக்ஷன் திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. பெரும் எதிர்பார்ப்புடன் ரிலீசான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் இப்படம் கூகுளில் சினிமா ரசிகர்களால் அதிகம் தேடப்பட்டது. இப்படம் அமேசான் பிரைம் மற்றும் ஜீ5 தளத்தில் காணலாம்.
அக்ஷய் குமார் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த காமெடி, மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Housefull 5'. மக்களின் நல்ல வரவேற்பு பெற்ற இப்படம், கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் 7ம் இடத்தை பிடித்துள்ளது. மேலும் இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
கடந்தாண்டு இறுதியில் வெளிவந்த கேங்ஸ்டர் மலையாள திரைப்படம் 'Marco'. ரெத்தம் தெறிக்க தெறிக்க உருவான வெறித்தனமான இந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் 6ம் இடத்தை பிடித்துள்ளது. இப்படத்தை அமேசான் பிரைம், ஆஹா ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
2016ல் ஹிந்தியில் வெளிவந்த ரொமான்டிக் திரைப்படம் 'Sanam Teri Kasam'. இப்படம் 2025ல் சினிமா ரசிகர்களால் கூகுளில் அதிக தேடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 5ம் இடத்தை பிடித்துள்ள இப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
ஹிந்தியில் வெளிவந்த அதிரடி ஆக்ஷன், அட்வென்ச்சர், திரில்லர் திரைப்படம் 'War 2'. இந்த பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ள வார் 2 படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு தமிழ் படம் ரஜினியின் 'கூலி'. பிளாக் பாஸ்டர் ஹிட்டான இப்படம், இந்த பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளது. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த பிரமாண்ட திரைப்படம் 'காந்தாரா சாப்டர் 1'. தென்னிந்தியாவின் நம்பர் ஒன் வசூல் படமாக உள்ளது. இருப்பினும் முதல் பாகத்தின் வசூலை முந்தமுடியவில்லை. இந்த பட்டியலில் 2ம் இடத்தை பிடித்துள்ள இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.


Click it and Unblock the Notifications