Home / Photos
2வது ஒருநாள் போட்டி.. வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா.. போட்டோஸ்!
By Chandru
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
1/9
Photo Credit: PTI
Share
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா மைதானத்தில் நடைபெற்றது.
2/9
Photo Credit: PTI
Share
3 நாள் கொண்ட தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
3/9
Photo Credit: PTI
Share
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
4/9
Photo Credit: PTI
Share
வேஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜான் கேம்ப்பெல் மற்றும் கார்ட்டி களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். இருவரும் சதம் அடித்தனர்.
5/9
Photo Credit: PTI
Share
50 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் குவித்தது. 406 எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாட இந்தியா களமிறங்கியது.
6/9
Photo Credit: PTI
Share
இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் ஷர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். இருவருமே முதல் ஓவரில் இருந்து அதிரடி ஆட்டத்தை தொடங்கினர். அதன்படி ரோகித் ஷர்மா 75 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
7/9
Photo Credit: PTI
Share
அதேபோல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சுப்மன் கில் 133 பந்துகளில் 223 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். மேலும் ருத்ராஜ், விராட் கோலி உள்ளிட்டோர் அதிரடி விளையாட்டை வெளிப்படுத்தினர்.
8/9
Photo Credit: PTI
Share
இறுதியில் 43.3 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 406 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டிகள் வித்தியாசத்தில் இந்தியா அணி அபார வெற்றி பெற்றது.
9/9
Photo Credit: PTI
Share
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா அணி தொடரை கைப்பற்றியுள்ளது.



Click it and Unblock the Notifications