Home / Photos
பாஸ் காசு இல்ல கொஞ்சம் சரக்கு வாங்கி கொடுங்க....! ஓசியில் சரக்கு கேட்டு மதுபான கடையை சூறையாடிய குடிமகன்கள்....! மதுரையில் ஒரே பரபரப்பு!
By Chandru
மதுரை மாவட்டம் அ.கல்லுப்பட்டியை சேர்ந்த அருண்பிரகாஷ் என்பவர் நேற்று மாலை எல்லீஸ் நகர் 70 அடி ரோட்டில் உள்ள மதுபான கூடத்துக்கு மது அருந்த சென்றுள்ளார்.
1/9
Share
மதுரை மாவட்டம் அ.கல்லுப்பட்டியை சேர்ந்த அருண்பிரகாஷ் என்பவர் நேற்று மாலை எல்லீஸ் நகர் 70 அடி ரோட்டில் உள்ள மதுபான கூடத்துக்கு மது அருந்த சென்றுள்ளார்.
2/9
Share
மதுபான கடையில் 5 பேர் கொண்ட கும்பல் அருண் பிரகாஷிடம் தங்களுக்கு இலவசமாக மதுபானம் வாங்கித் தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு அருண் பிரகாஷ் மறுத்து விட்டார்.
3/9
Share
இதையடுத்து இரண்டு தரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இது ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது.
4/9
Share
இந்நிலையில் ஆத்திரமடைந்த 5 பேரும் பீர் பாட்டிலால் அருண்பிரகாஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மதுபான கூடத்தையும் அடித்து நொறுக்கினர்.
5/9
Share
இச்சம்பவம் தொடர்பாக அருண் பிரகாஷ் எஸ்.எஸ். காலனி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
6/9
Share
புகாரினை ஏற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் 5 பேர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளதாகவும் அவர்களுடன் ஒன்று சேர்ந்து எல்லிஸ் நகர் டாஸ்மாக் மதுபான கூடத்தை சூறையாடியது தெரிய வந்துள்ளது.
7/9
Share
இதையடுத்து எஸ்.எஸ்.காலனி போலீசார் சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து வந்து போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.
8/9
Share
இந்நிலையில் அந்த விசாரணையில் ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரைச் சேர்ந்த கணேசன், கார்த்திக், அசாருதீன், விக்னேஷ் சுனில் பிரபாகர், சீனிவாசன் என்பது தெரியவந்தது.
9/9
Share
இதனைத் தொடர்ந்து எஸ்.எஸ். காலனி போலீசார் 5 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications