5 மாநில தேர்தல்: ஒவ்வொரு மாநில முதலமைச்சரின் சொத்து மதிப்பு என்ன? யார் கோடீஸ்வரர்? லிஸ்ட்!
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த 5 மாநில முதலமைச்சர்கள் சொத்து மதிப்பு என்ன? யார் கோடீஸ்வரர்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
புதுச்சேரி முதலமைச்சராக எம். ரங்கசாமி உள்ளார். தேர்தல் பிரமாணப் பாத்திரத்தில் தனது சொத்து மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் என குறிப்பிட்டுள்ளார்.
கேரளா முதலமைச்சராக பினராயி விஜயன் உள்ளார். தேர்தல் பிரமாணப் பாத்திரத்தில் தனது சொத்து மதிப்பு சுமார் 43.35 லட்சம் ரூபாய் எனவும் தனது மனைவி பெயரில் சுமார் 60.58 லட்சம் ரூபாய் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அசாம் மாநில முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளார். தேர்தல் பிரமாணப் பாத்திரத்தில் தனது சொத்து மதிப்பு சுமார் 2.36 கோடி ரூபாய் என குறிப்பிட்டுள்ளார். மேலும் 1.41 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். தேர்தல் பிரமாணப் பாத்திரத்தில் தனது சொத்து மதிப்பு சுமார் 16 லட்சம் ரூபாய் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் பிரமாணப் பாத்திரத்தில் தனது சொத்து மதிப்பு சுமார் 9 கோடி ரூபாய் என குறிப்பிட்டுள்ளார். மேலும் 5 மாநில முதல்வர்களில் முதல்வர் ஸ்டாலின் கோடீஸ்வர முதல்வராக உள்ளார்.


Click it and Unblock the Notifications