Home / Photos
PHOTOS : நடிகை சரிதாவை நியாபகம் இருக்கா? இவரின் கணவர், மகன்களை பாத்துருக்கீங்களா!
By Chandru
80-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சரிதாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
1/9
Share
80-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சரிதாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
2/9
Share
தமிழ் சினிமாவின் 80ஸ் காலகட்டத்தில் நடிகை ஸ்ரீ தேவி, அம்பிகா, ராதிகா, ரேவதி, குஷ்பூ, சில்க் ஸ்மிதா உள்ளிட்ட பல நடிகைகள் தமிழ் திரையுலகையே ஆட்டிப்படைத்தனர். ஒவ்வொரு நடிகைகளும் தங்களுக்கென மிக பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தையே உருவாக்கிக்கொண்டு தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவையே ஒரு கலக்கு கலக்கினர்.
3/9
Share
இப்படியாக பல போட்டிகள் நிறைந்த தென்னிந்திய சினிமா திரையுலகில் கடந்த 1978 ஆம் ஆண்டு 'தப்பு தாளங்கள்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை சரிதா. 80-களில் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட நடிகைகள் உலா வந்த நேரத்தில் புதுமுக நடிகையாக சரிதா அறிமுகமானார்.
4/9
Share
வெள்ளை நிறத்தில் நடிகைகள் பலர் ஜொலிஜொலிக்க, அழகிய உடல் தோற்றத்துடன் டஸ்க்கி ஸ்கின் லுக்கில் சரிதா தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தனது ஆரம்ப கால திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை பெரும் ஈர்க்காத சரிதா பின்னர் தனது அசத்தலான நடிப்பு திறன் மூலம் மிகவும் பாராட்டப்பட்டார்.
5/9
Share
தமிழ் சினிமாவின் முன்னனணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடிக்கும் அளவிற்கு முக்கிய நடிகைகளில் உருவாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். மேலும் நடிகை சரிதா நடித்த பெரும்பாலான படங்கள் இயக்குநர் பாலசந்தர் இயக்கிய படங்களில் தான்.
6/9
Share
அந்தவகையில் வண்டி சக்கரம், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, புதுக்கவிதை உள்ளிட்ட படங்கள் இவரின் நடிப்பு திறனுக்கு பெயர் வாங்கிக்கொடுத்த படமாக திகழ்ந்தது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் டாப் நடிகையாக வலம் வந்தார்.
7/9
Share
தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக திகழ்ந்த சரிதா கடந்த 1975 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் வெங்கட சுப்பையா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை சற்றும் எதிர்பார்க்காமல் வெறும் ஓராண்டுக்குள் முடிவுக்கு வந்தது. திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த பின்னரும் தனது திரைவாழ்க்கையில் தொய்வின்றி நடித்து வந்தார்.
8/9
Share
பின்னர் 1988 ஆம் ஆண்டு நடிகர் முகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிகளுக்கு சிரவன், தேஜாஸ் எனும் இரு மகன்கள் உள்ளனர். முதல் திருமணம் ஒரு வருடத்தில் முடிவடைந்த நிலையில் சரிதாவின் இரண்டாவது திருமணமும் 23 ஆண்டுகளுக்கு பின்னர் முடிவுக்கு வந்தது.
9/9
Share
தற்போது தனது இரு மகன்களுடன் தனியாக வசித்து வரும் சரிதாவின் குடும்ப புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இரு மகன்களுடன் சரிதா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications