Home / Photos
PHOTOS: முந்தானை முடிச்சி படத்தில் வரும் 'பட்டு' டீச்சரை நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்களேன்!
By Chandru
80s actress Unni Mary latest photos goes viral on social media. check out the full details and photos here.
1/8
Share
80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மக்களின் பேராதரவை பெற்றாலும் இந்த சினிமா உலகம் அவர்களுக்கு போதிய அங்கீகாரம் கொடுத்ததில்லை.
2/8
Share
ஆனால் தற்போதைய சினிமா உலகில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு நிகராக குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை ரசிகர்களும், திரையுலகினரும் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் நடிகை உன்னி மேரி.
3/8
Share
மலையாள நடிகையான உன்னி மேரி இயக்குநர் பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான முந்தானை முடுச்சு படத்தில் பட்டு டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர். மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த உன்னி மேரி 'அந்தரங்கம்' என்ற கமல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
4/8
Share
தொடர்ந்து சுவாமி ஐயப்பன், முடி சூடா மன்னன், ரோசாப்பூ ரவிக்கை காரி, ரஜினியின் ஜானி என அடுத்தடுத்து டாப் நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி குணச்சித்திர நடிகையாக வலம் வர தொடங்கினார்.
5/8
Share
அதன்பின்னர் 1983 ஆம் ஆண்டு இயக்குநர் பாக்கியராஜ் இயக்கி, நடித்த முந்தானை முடுச்சு படத்தில் பட்டு டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் கலக்கலாக கவர்ச்சி காட்டி நடித்து ஒட்டுமொத்த தமிழ் ஆடியன்ஸையும் கொள்ளையடித்துவிட்டார்.
6/8
Share
உன்னி மேரியை பார்ப்பதற்காகவே மீண்டும் மீண்டும் தியேட்டர்களில் இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த ஒரே ஒரு படத்தின் மூலம் மிகவும் ஃபேமஸ் ஆன உன்னி மேரிக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.
7/8
Share
தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏகப்பட்ட படவாய்ப்புகளுடன் பிஸி நடிகையாக வலம் வந்தார். திரை வாழ்க்கையில் ஓஹோவென ஜொலித்த மேரி, ரீஜோய் என்பவரை திருமணம் செய்து கொண்டார், அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டார்.
8/8
Share
பல மொழி படங்களில் தனது கவர்ச்சியிலும், நடிப்பினாலும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த உன்னி மேரி திருமணத்திற்கு பின் எங்கே போனார் என ரசிகர்கள் வலை வீசி தேட தொடங்கினர். இந்த நிலையில் தேடுதலுக்கு பலன் கிடைத்து, உன்னி மேரியின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. தற்போது உன்னி மேரியின் லேட்டஸ்ட் புகைப்படம் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications