தமிழ்நாட்டில் உள்ள 9 நவக்கிரக கோவில்கள் என்னென்ன? அது தரும் பலன்கள் என்ன?
கிரகங்களுக்குரிய பரிகார ஸ்தலம், அவை கொடுக்கும் பலன்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சூரியன்: தஞ்சாவூர் மாவட்டம் திருவடைமருதூரில் அமைத்துள்ள சூரியனார் கோவில் சூரியன் கிரகத்திற்கு ஏற்றது. இங்கு வழிபட்டால் ஆரோக்கியம் மேம்படுத்தல், விழித்திறன் மேம்படுத்தல், அரசு வேலைக்கு முயற்சிப்போருக்கு வெற்றி கைகூடும் என கூறப்படுகிறது.
சந்திரன்: தஞ்சாவூர் மாவட்டம் திங்களூரில் அமைத்துள்ள கைலாசநாதர் கோவில் சந்திரன் கிரகத்திற்கு ஏற்றது. அங்கு வழிபட்டால், மன நிம்மதி, நீண்ட ஆயுள் வழங்குவதாக கூறப்படுகிறது.
செவ்வாய்: மயிலாடுதுறையில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய் கிரகத்திற்கு ஏற்றது. அங்கு வழிபட்டால், செவ்வாய் தோஷம் நீங்கும், நிலம் பிரச்னை நீங்கும், திருமண தடைகள் நீங்கும் என கூறப்படுகிறது.
புதன்: மயிலாடுதுறை மாவட்டம் திருவேற்காட்டில் அமைத்துள்ள ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் கோவில் புதன் கிரகத்திற்கு ஏற்றது. அங்கு வழிபட்டால், கல்வி, புத்தி கூர்மை, பேச்சுத்திறன் அதிகரிக்கும், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது.
வியாழன் (குரு): திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் அமைத்துள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவில் குரு கிரகத்திற்கு ஏற்றது. அங்கு வழிபட்டால், புத்திர பாக்கியம், திருமண யோகம், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது.
சுக்கிரன்: தஞ்சாவூர் மாவட்டம் கஞ்சனூரில் அமைத்துள்ள அக்னீஸ்வரர் கோவில் சுக்கிரன் கிரகத்திற்கு ஏற்றது. அங்கு வழிபட்டால் செல்வம் அதிகரித்து ஆடம்பர வாழ்க்கை மேம்படும், திருமண வாழ்வில் பிரச்சனை நீங்கும் என கூறப்படுகிறது.
சனி: திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் சனி கிரகத்திற்கு ஏற்றது. சனியால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும் என கூறப்படுகிறது.
ராகு: தஞ்சாவூரில் உள்ள திருநாகேஸ்வரத்தில் அமைத்துள்ள நாகநாதசுவாமி கோவில் ராகு கிரகத்திற்கு ஏற்றது. பில்லி சூனியம் நீங்க, செல்வம் அதிகரிக்க, செய்யும் தொழில் ஏற்படும் தடைகள் நீங்க கோவிலில் வழிபடுவது நல்லது என கூறுகின்றனர்.
கேது: மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்தில் அமைத்துள்ள கேது பகவான் கோவில் கேது கிரகத்திற்கு ஏற்றது. தீரா வியாதிகள் தீர, வாழ்வில் மோட்சம் கிடைக்க அந்த கோவிலில் வழிபடுவது நன்மை தரும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications