Home / Photos
PHOTOS: காந்த கண்ணழகி நடிகை சிவரஞ்சனியை நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க!
By Chandru
90s actress sivaranjani latest photos goes viral on social media. check out her latest pics here.
1/7
Share
90ஸ் நடிகர்களின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வரும் நிலையில் தற்போது நடிகை சிவரஞ்சனியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
2/7
Share
90ஸ் நடிகைகள் பெரும்பாலானோர் கணவர், குழந்தை என குடும்ப வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகின்றனர். இதில் சிலர் மட்டுமே இன்றும் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து குடும்பத்தையும் சினிமாவையும் இருக்கண்களாக கவனித்து வருகின்றனர். அந்தவகையில் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களை தனது காந்த கண்களால் ஈர்த்தவர் நடிகை சிவரஞ்சனி.
3/7
Share
ஹிருதய சம்ரயா என்ற கன்னட படத்தின் மூலம் திரை துறைக்கு அறிமுகமானவர் நடிகை சிவரஞ்சனி. அதன்பின்னர் 1990ம் ஆண்டு வெளியான மிஸ்டர் கார்த்திக் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
4/7
Share
தொடர்ந்து மனசார வாழ்த்துங்களேன், தலைவாசல், தங்க மனசுக்காரன் என அடுத்தடுத்து பட வாய்ப்புகளுடன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கினார். ரஜினி, கமல், பிரசாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார்.
5/7
Share
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 90ஸ் தொடக்கம் முதல் இதுவரை தென்னிந்திய சினிமாவின் உச்சபட்ச நடிகையாக வலம் வந்த சிவரஞ்சனி, கடந்த 1999ம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
6/7
Share
திருமணத்துக்கு பின் சினிமாவில் தலையை காட்டாமல் ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். நடிகர் ஸ்ரீகாந்த், விஜய்யின் வாரிசு படத்தில் விஜய்யின் அண்ணனாக நடித்திருப்பார்.
7/7
Share
காந்த கண்ணழகி சிவரஞ்சனி இப்போ எப்படி இருக்கிறார்? என ரசிகர்கள் தேடி வரும் நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. அப்படி இருந்தவரா இப்படி மாறிட்டாரு என புகைப்படங்களுக்கு கம்மெட் மற்றும் லைக் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications