வசூல் வேட்டையில் வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் 'ஆடு 3' மலையாள திரைப்படம்.. 4 நாள் கலெக்ஷன் என்ன? அதிகாரபூர்வ தகவல்!
மலையாளத்தில் சமீபத்தில் வெளிவந்த 'ஆடு 3' திரைப்படம் 4 நாட்களில் செய்த வசூல் பற்றிய அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயசூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மலையாள காமெடி, ஆக்ஷன் திரைப்படம் 'ஆடு 3'. விஜய் பாபு, சன்னி வெய்ன் உள்ளிட்ட நடித்துள்ளனர். மிதுன் மானுவல் தாமஸ் இயக்கியுள்ளார். இப்படம் கடந்த மார்ச் 19ம் தேதி தியேட்டரில் ரிலீசானது.
கதை சுருக்கம்: ஒரே சம்பவம் மூன்று பருவங்கள் ஆதாவது கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று காலங்களில் நடக்கும் வித்தியாசமான கதைக்களம். ஜெயசூர்யாவின் ஊரில் கயிறு இழுக்கும் போட்டி நடப்பது வழக்கம். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஆடு ஒன்று பரிசாக கொடுக்கப்படுகிறது. ஜெயசூர்யா டீம் அந்த ஆட்டை வென்றுவிடுகின்றனர். வெற்றிபெற்ற ஆட்டை கொலைசெய்யும் போது நடக்கும் சுவாரசிய சம்பவங்களே இப்படத்தின் காமெடி நிறைந்த ஆக்ஷன் கதைக்களம்.


Click it and Unblock the Notifications