Home / Photos
5 ஆண்டாக தமிழில் தலை காட்டாத 'ஆடுகளம்' பட நடிகை.. இப்போ என்ன பண்றாரு தெரியுமா? கிளிக்ஸ்!
By Chandru
நடிகை டாப்ஸியின் சமீபத்திய புகைப்படங்கள் சில ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/9
Photo Credit: instagram@taapsee pannu
Share
தெலுங்கு சினிமா மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை டாப்ஸி. அதன்பின்னர் 2011ல் வெளிவந்த வெற்றிமாறனின் 'ஆடுகளம்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழில் தனது திரை பயணத்தை தொடங்கினார்.
2/9
Photo Credit: instagram@taapsee pannu
Share
ஆடுகளம் செம ஹிட்டான நிலையில் மக்களிடையே மிகவும் பிரபலமானார். அதன்பின்னர் வெவ்வேறு தமிழ் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
3/9
Photo Credit: instagram@taapsee pannu
Share
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் என்ட்ரி கொடுத்து பிரபல நடிகையாக வலம் வர தொடங்கினார். இருமொழிகளிலும் டாப்ஸிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வந்தது.
4/9
Photo Credit: instagram@taapsee pannu
Share
வந்தான் வென்றான், வை ராஜா வை, காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். இறுதியாக இவர், 'அன்னாபெல் சேதுபதி' என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் தமிழில் ஆளையே காணொம்.
5/9
Photo Credit: instagram@taapsee pannu
Share
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருந்து இவர், ஹிந்தி சினிமாவிலும் என்ட்ரி கொடுத்து மக்கள் கவனம் ஈர்த்து வந்தார். டாப்ஸிக்கு பாலிவுட் சினிமா நல்ல வரவேற்பு கொடுத்தது.
6/9
Photo Credit: instagram@taapsee pannu
Share
பாலிவுட் சினிமாவில் பல ஹிட் படங்கள் கொடுத்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த 'டங்கி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படம் வசூலில் சாதனை படைத்தது. இதன் மூலம் டாப்ஸியின் மார்க்கெட் பலமடங்கு உயர்ந்தது.
7/9
Photo Credit: instagram@taapsee pannu
Share
பாலிவுட் சினிமாவில் அதிக ஆர்வம் காட்டி வரும் டாப்ஸி, தமிழ் சினிமாவில் நடிப்பதையே நிறுத்திக்கொண்டார். கடந்த 5 வருடங்களாக தமிழில் ஆளையே காணோம். முழுக்க முழுக்க ஹிந்தி படங்களில் ஆர்வமுடன் நடித்து வருகிறார்.
8/9
Photo Credit: instagram@taapsee pannu
Share
தமிழ் படம் மூலம் பாப்புலரான இவர், தற்போது தமிழில் தலையை காட்டாமல் இருந்து வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
9/9
Photo Credit: instagram@taapsee pannu
Share
தற்போது டாப்ஸியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. எப்போது தமிழ் திரைக்கு மீண்டும் வரப்போறீங்க? என்ற ஏக்கத்துடன் டாப்ஸியின் கிளாமர் புகைப்படங்களுக்கு கமெண்ட் மூலம் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். தற்போது டாப்ஸியின் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications