ஊர்வசி, ஜோஜு ஜோர்ஜின் தரமான சைக்கலாஜிக்கல் திரில்லர்.. ஓடிடியில் ரிலீஸாகவுள்ள மலையாளம் படம்.. எப்போது? எதில் பார்க்கலாம்?
ஊர்வசியின் மிரட்டலான நடிப்பில் சமீபத்தில் தியேட்டரில் ரிலீசாகி மாஸ் ஹிட்டான மலையாள திரில்லர் திரைப்படத்தை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். என்ன படம்? எந்த ஓடிடியில்? எப்போது ரிலீஸ்? என்பதை வாங்க பார்ப்போம்.
மலையாள சினிமா: வித்தியாசமான கதைகளுக்கு பெயர்போனது மலையாள சினிமா. கணிக்கமுடியாத சஸ்பென்ஸ், வியப்பூட்டும் ட்விஸ்ட் காட்சிகள் என ஆடியன்ஸின் கவனத்தை கட்டிப்போடும் விதமாக மலையாள படங்களின் திரைக்கதை அமைத்திருக்கும். அப்படியான படங்கள் ஏன் நம்ம மொழியில் எடுக்கப்படுவதில்லை? என்ற ஏக்கமும் சினிமா ரசிகர்களுக்கு உண்டு. இதனால் மலையாளத்தில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் தமிழிலும் வெளியாகி ஹிட்டாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தியேட்டரில் ரிலீஸாகி அமோக வரவேற்பு பெற்ற மலையாள படத்தை பற்றி தான் பார்க்கபோகிறறோம்.
படக்குழு: இயக்குநர் சஃபர் சனல் இயக்கத்தில் ஊர்வசி, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜோர்ஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'ஆஷா'. மது நீலகண்டன் இசையமைத்துள்ளார்.
கதை என்ன: சுருக்சுருக்கென கோவப்படும் கதாபாத்திரமாக ஊர்வசி உள்ளார். அவரின் மகளாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். ஊர்வசியின் கணவர் ஏற்கனவே இறந்துவிட மகள் ஐஸ்வர்யாவுடன் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
கோவக்காரியான ஊர்வசி கணவர் இறப்புக்கு பின் பல சவால்கள், பிரச்சனைகளுக்கு இடையே தான் வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் இரவு வேளையில் ஊர்வசியும், ஐஸ்வர்யாவும் காரில் சென்றுகொண்டிருக்க ஜோஜு ஜோர்ஜின் வாகனம் பின்னால் பின்தொடர்ந்து வருகிறது.
ஒருகட்டத்தில் ஜோஜு ஜோர்ஜ் மற்றும் ஊர்வசி காரும் எதிர்பாராத சின்ன சாலை விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். அந்த சின்ன விபத்தினால் இருவரும் பெரிய சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றனர். ஜோஜு ஜோர்ஜ்-ஊர்வசிக்கும் இடையே என்ன பிரச்சனை? ஒரு சின்ன விபத்து எப்படி பெரிய சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது? என்பதை கூறும் விறுவிறுப்பு நிறைந்த சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படமாகும்.
ஓடிடி? கடந்த செப்டம்பர் 11ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகி சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம், வரும் அக்டோபர் 16ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் எதிர்பார்ப்புடன் ரிலீஸாகவுள்ளது. வரும் வீக் எண்டு நாட்களில் இப்படத்தை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.



Click it and Unblock the Notifications