Home / Photos
42 வயதில் தீவிர உடற்பயிற்சி.. பிளாஸ்ட் செய்த நடிகை அபிராமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை அபிராமி தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோ பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
1/6
Photo Credit: instagram@Abhirami
Share
மலையாள சினிமாவில் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகை அபிராமி. அர்ஜுனின் 'வானவில்' படத்தின் மூலம் தனது தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
2/6
Photo Credit: instagram@Abhirami
Share
அதனை தொடர்ந்து பிரபு நடிப்பில் வெளிவந்த 'மிடில் கிளாஸ் மாதவன்' படத்தில் நாயகியாக நடித்து மிகவும் பிரபலமானார். ஹோம்லி லுக்கில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த இவர், சமுத்திரம், விருமாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ஜொலிக்கத் தொடங்கினார்.
3/6
Photo Credit: instagram@Abhirami
Share
வெவ்வேறு ஹிட் படங்களில் நடித்த அபிராமி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து தென்னிந்தியளவில் ஸ்டார் நடிகையாக ஜொலித்தார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 'மகாராஜா' படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் அதிகம் பேசப்பட்டது.
4/6
Photo Credit: instagram@Abhirami
Share
சமீபத்தில் வெளிவந்த அர்ஜுனின் 'பிளாஸ்ட்' படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மூலம் ரசிகர்களை வியக்கவைத்த இவர், அதற்கு எடுத்த முயற்சிகளை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
5/6
Photo Credit: instagram@Abhirami
Share
42 வயதாகும் இவர், இளம் நடிகைகளுக்கு இணையாக ஜிம்மில் ஓர்க்அவுட் செய்யும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை இம்ப்ரஸ் செய்துள்ளார். அதேபோல் பிளாஸ்ட் படத்திற்கு பின் அபிராமியின் மார்க்கெட் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வெவ்வேறு படங்களில் அபிராமியை எதிர்பார்க்கலாம் எனவும் கூறப்படுகிறது.
6/6
Photo Credit: instagram@Abhirami
Share
இந்த நிலையில் 42 வயதாகும் அபிராமி, டைட்டான ஜிம் உடையில் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோ பதிவினை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications