Home / Photos
நடிகர் அர்ஜுனின் மூத்த மகளை தெரியும்.. இரண்டாவது மகளை பாத்துருக்கீங்களா? யப்பா.. என்னமா அழகா இருக்காங்க!
By Chandru
ஆக்ஷன் கிங் அர்ஜுனின் இரண்டாவது மகளின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகராக வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன். கன்னட சினிமா மூலம் தனது திரை பயணத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து கன்னட சினிமாவில் பயணித்து வந்த அர்ஜுன், 'நன்றி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2/7
Photo Credit: instagram
Share
தொடர்ந்து கடமை, நாகம், இளமை என தொடர்ந்து தமிழ் படங்களில் ஹீரோவாக வலம் வந்த அர்ஜுனுக்கு தமிழ் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுக்கத் தொடங்கினர். தொடர்ந்து ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகராக வலம் வந்தார்.
3/7
Share
தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து தென்னிந்தியாவின் ஸ்டார் நடிகராக தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார். சினிமாவில் செம பீக்கில் இருந்து அர்ஜுன், நிவேதிதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
4/7
Photo Credit: instagram
Share
மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன், இளைய மகள் அஞ்சனா சார்ஜா என அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா, விஷாலின் பட்டத்துயானை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.
5/7
Photo Credit: instagram
Share
இப்படத்தை தொடர்ந்து கன்னடத்திலும் அறிமுகமானார். இருப்பினும் இவருக்கு சொல்லும் அளவுக்கு படங்கள் கை கொடுக்கவில்லை. இதனால் கடந்தாண்டு காமெடி நடிகர் தம்பி ராமைய்யா மகன் உமாபதியை காதல் திருமணம் செய்துகொண்டார்.
6/7
Photo Credit: instagram
Share
இவரை தொடர்ந்து தற்போது அர்ஜுனின் இரண்டாவது மகள் அஞ்சனாவின் சமீபத்திய புகைப்படம் தான் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அக்காவை போல் இவர் திரைப்படங்களில் தென்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சினிமா பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை.
7/7
Share
சினிமாவை காட்டிலும் பிசினஸில் ஆர்வம் கொண்ட அஞ்சனா, சொந்தமாக பிஸ்னஸ் ஒன்றை நடத்தி வருகிறார். அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் அஞ்சனா. அந்தவகையில் அஞ்சனாவின் கிளாமர் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஸ்டன்னாகி உருகி போயினர். தற்போது இவரின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications