bredcrumb

ஆண்டவர் எதுக்கு வந்துருப்பாரு?...இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவுக்குள் கமல்!....இணையத்தில் செம ட்ரெண்டிங்!

By Chandru
| Updated: Monday, September 20, 2021, 18:07 [IST]
நடிகர் கமல் ஹாசன் இசைஞானி இளையராஜாவை சந்தித்த போட்டோக்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
ஆண்டவர் எதுக்கு வந்துருப்பாரு?...இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவுக்குள் கமல்!....இணையத்தில் செம ட்ரெண்டிங்!
1/9

2/9
இதுவரை 7000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, பத்ம விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை வாங்கி குவித்துள்ளார். 

ஆண்டவர் எதுக்கு வந்துருப்பாரு?...இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவுக்குள் கமல்!....இணையத்தில் செம ட்ரெண்டிங்!
3/9
35 ஆண்டுகளுக்கும் மேலாக பிரசாத் ஸ்டுடியோவில் ரெக்கார்டிங் செய்து வந்தார் இளையராஜா திடீரென நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். 
ஆண்டவர் எதுக்கு வந்துருப்பாரு?...இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவுக்குள் கமல்!....இணையத்தில் செம ட்ரெண்டிங்!
4/9
இளையராஜா இதனை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் சமரச தீர்வு ஏற்பட்டு ஸ்டுடியோவுக்குள் இருந்த இளையராஜாவுக்கு சொந்தமான உடைமைகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
ஆண்டவர் எதுக்கு வந்துருப்பாரு?...இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவுக்குள் கமல்!....இணையத்தில் செம ட்ரெண்டிங்!
5/9
இதனை தொடர்ந்து தியாகராயநகரில் உள்ள எம்எம் தியேட்டரை தனது ரெக்கார்டிங்க ஸ்டுடியோவாக மாற்றினார் இளையராஜா. சொந்தமாக தொடங்கியுள்ள ஸ்டுடியோவில் பல்வேறு படங்களுக்கான இசைப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் இளையராஜா.
ஆண்டவர் எதுக்கு வந்துருப்பாரு?...இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவுக்குள் கமல்!....இணையத்தில் செம ட்ரெண்டிங்!
6/9
இந்நிலையில் இசைஞானி இளையராஜாவை நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்துள்ளார். இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவிற்கு முதல் முறையாக சென்ற நடிகர் கமல்ஹாசன் அவரை சந்தித்து பேசினார். 
ஆண்டவர் எதுக்கு வந்துருப்பாரு?...இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவுக்குள் கமல்!....இணையத்தில் செம ட்ரெண்டிங்!
7/9
மேலும் இளையராஜாவுக்கு பூங்கொத்து கொடுத்த நடிகர் கமல்ஹாசன், அவருடன் அமர்ந்து நீண்ட நேரம் பேசினார். மேலும் இருவரும் ஸ்டுடியோவுக்குள் அமர்ந்து பேசும் போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆண்டவர் எதுக்கு வந்துருப்பாரு?...இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவுக்குள் கமல்!....இணையத்தில் செம ட்ரெண்டிங்!
8/9

நடிகர் கமல் ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். அடுத்த இரண்டு வாரங்களில் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்துள்ளார் கமல். 
ஆண்டவர் எதுக்கு வந்துருப்பாரு?...இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவுக்குள் கமல்!....இணையத்தில் செம ட்ரெண்டிங்!
9/9

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு நேரில் சென்றார். ஒரே நாளில் இரண்டு முறை அடுத்தடுத்து சென்றார். இளையராஜாவின் ஸ்டுடியோவுக்குள் சென்றது கோவிலுக்குள் சென்ற உணர்வை தந்ததாக நடிகர் கமல் கூறியது குறிப்பிடத்தக்கது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X