Home / Photos
PHOTOS: இந்த புகைப்படத்தில் இருக்கும் வாரிசு நடிகர்கள் யாருன்னு கண்டுபிடிங்க? இணையத்தை கலக்கும் டாப் நடிகர்களின் சிறு வயது புகைப்படம்..
By Chandru
சினிமா பிரபலங்களில் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும். அந்தவகையில் சமீபத்தில் இரு பிரபலங்களின் சிறு வயது புகைப்படம் வெளியாகி இணையத்தால் வைரலாகி வருகிறது.
1/6
Share
சினிமா பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும். அந்தவகையில் சமீபத்தில் இரு பிரபலங்களின் சிறு வயது புகைப்படம் வெளியாகி இணையத்தால் வைரலாகி வருகிறது.
2/6
Share
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களின் சிறு வயது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாவது வழக்கம், அதிலும் கூடயே "இது யாருன்னு கண்டுபிடிங்க பாப்போம்" என்ற சஸ்பென்சோடு இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும்.
3/6
Share
சினிமாவில் தற்போதைய சூழ்நிலையில் நடிகர், நடிகைகள் நேரத்திற்கு நேரம் தங்களின் தோற்றத்தை மாற்றிக்கொண்டே இருக்கின்றனர். இன்று ஒரு தோற்றத்தில் தென்படும் நடிகர் நாளை பார்த்தால் வேற லுக்கில் தோன்றி ரசிகர்களுக்கே குழப்பத்தை ஏற்படுத்துவர். இந்தநிலையில் இவர்களின் சிறு வயது புகைப்படத்தை பார்த்தால் எப்படி கண்டுபிடிப்பது என்று சில குசும்பு பிடுச்ச ரசிகர்கள் கேள்வி கேட்கின்றனர்..
4/6
Share
அந்தவகையில் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள ஸ்டார் நடிகர்களின் சிறு வயது புகைப்படத்தில் இருப்பவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.. சுரரை போற்று திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்கவைத்தவர் நடிகர் சூர்யா. ஆம் இந்த சிறு வயது புகைப்படத்தில் இருப்பவர் வேற யாரும் இல்லைங்க நம்ம சூர்யா தான்..
5/6
Share
நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் பிஸியாக உள்ளார், இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை விண்ணை முட்ட செய்துள்ளது.
6/6
Share
அதேபோல் இரண்டாவதாக இருப்பவர் யாருனு உங்களுக்கு சொல்லவா வேணும், அது வேற யாரும் இல்லை நம்ம கார்த்தி தான்.. தற்போது கார்த்தி ஜப்பான் திரைப்படத்தில் பிஸியாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.. அந்தவகையில் சினிமா வாரிசுகளான இந்த சகோதரர்களின் சிறு வயது புகைப்படம் தற்போது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications