Home / Photos
'திருச்சிற்றம்பலம்' பட பாணியில்.. உயிர்த்தோழியை கரம் பிடிக்கப்போகும் இளம் நடிகர்.. வாழ்த்தும் பிரபலங்கள்!
By Chandru
இளம் நடிகர் கிஷன் தாஸ் தனது உயிர்த்தோழியை கரம் பிடிக்கப்போகும் செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
1/6
Photo Credit: instagram
Share
நிகழ்ச்சி தொகுப்பாளரும், திரைப்பட நடிகருமான கிஷன் தாஸுக்கு உயிர்தோழியுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து பிரபலங்கள், ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைத்து வருகின்றனர்.
2/6
Photo Credit: instagram
Share
நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது திரை பயணத்தை ஆரம்பித்தவர் நடிகர் கிஷன் தாஸ். பின்னர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளைத்திரையுலும், தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார்.
3/6
Photo Credit: instagram
Share
இப்படத்தை தொடர்ந்து ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியான முதல் நீ முடிவும் நீ என்ற படத்தில் ஹீரோவோக ஆறிமுகமானார். இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற கிஷன் தாஸுக்கு மவுசு அதிகமானது. இதன் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது.
4/6
Photo Credit: instagram
Share
பின்னர் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியான sync என்ற படத்தில் நடித்துள்ளார், தொடர்ந்து ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தருணம், ஈரப்பதம் காற்று மழை ஆகிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram
Share
வளர்ந்து வரும் இளம் நடிகராக இளைஞர்களை ஈர்த்து வரும் கிஷன் தாஸ் தனது உயிர்தோழியை நிச்சயதார்த்தம் செய்துள்ளார் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார். தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் எப்படி தனது உயிர்த்தோழியை திருமணம் செய்துகொள்வாரோ அதேபோல் தானும் எனது உயிர்தோழியை திருமணம் செய்யப்போகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
6/6
Photo Credit: instagram
Share
இந்த தகவலை புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த கிஷன் தாஸுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மஞ்சிமா மோகன், கௌரி கிஷன், ரெஜினா ஆத்மிகா உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் ரசிகர்கள், நெட்டிசன்களும் புகைப்படத்திற்கு லைக்குகளுடன் வாழ்த்துக்களை பறக்கவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications