Home / Photos
PHOTOS : மறைந்த காமெடி நடிகர் மயில்சாமியின்.. அரிய குடும்ப புகைப்படங்கள்!
By Chandru
காமெடி நடிகர் மயில்சாமி நேற்று மாரடைப்பால் காலமான நிலையில் இன்று அவரின் இறுதி சடங்கு நடைபெறவுள்ளது. இந்நிலையில் மயில்சாமி தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram
Share
காமெடி நடிகர் மயில்சாமி நேற்று மாரடைப்பால் காலமான நிலையில் இன்று அவரின் இறுதி சடங்கு நடைபெறவுள்ளது. இந்நிலையில் மயில்சாமி தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
2/8
Photo Credit: instagram
Share
அவர பார்த்தாலே சிரிப்பு வரும் என சொல்வது போல் காமெடி நடிகர் மயில்சாமியை பார்த்தாலே உதடுகள் புன்னகைக்கும். 1984 ஆம் ஆண்டு வெளியான தாவணி கனவுகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மயில்சாமி.
3/8
Photo Credit: instagram
Share
சிறு கதாபாத்திரத்தில் தனது திரைவாழ்க்கையை தொடங்கிய மயில்சாமி, அசத்தல் காமெடி, குணச்சித்திர நடிப்பு என தமிழ் சினிமாவை திரும்பி பார்க்கவைத்தார். சூப்பர் ஸ்டார் முதல் காமெடி சூப்பர் ஸ்டார் வரை அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.
4/8
Photo Credit: instagram
Share
தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பலரையும் மகிழ்வித்த மயில்சாமியின் இறப்பு அதிர்ச்சியளித்தது . பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கும் மறைந்த காமெடி நடிகர் விவேக்கிற்கும் 10 பொருத்தம் என சொல்லலாம் .
5/8
Photo Credit: instagram
Share
மறைந்த காமெடி நடிகர் விவேக்குடன் ஏகப்பட்ட படங்களில் நடித்து பல அற்புதமான மறக்கமுடியாத காமெடி கட்சியை கொடுத்துள்ளார். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது சிரிப்பை தூண்டும் காமெடிகளை கொடுத்துள்ளனர்.
6/8
Photo Credit: instagram
Share
திரை வாழ்க்கையில் ஜொலித்த மயில்சாமி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு கொடைவள்ளலாக இருந்துள்ளார். தன்னிடம் உதவு கேட்டு வருபவருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து மகிழ்ச்சி கண்டவர் மயில்சாமி.
7/8
Photo Credit: instagram
Share
மயில்சாமி என்ற பெயருக்கு ஏற்றாற்போல் பலருக்கும் சாமியாக தக்க சமயத்தில் உதவி செய்துள்ளார். இப்படியாக தனக்காக மட்டும் வாழாமல் பிறருக்காகவும் வாழ்ந்த மயில்சாமி மாரடைப்பால் உயிரிழந்தது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியது.
8/8
Photo Credit: instagram
Share
மயில்சாமியின் மறைவுக்கு பின் இவரின் வீடியோ பல சமூகவலைத்தளங்களில் வைரலாக வலம் வந்த நிலையில் மயில்சாமி குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications