Home / Photos
PHOTOS: நடிகர் சந்தானத்தின் மனைவியை பாத்துருக்கீங்களான? இணையத்தை கலக்கும் சந்தானத்தின் குடும்ப புகைப்படங்கள்!
By Chandru
நடிகர் சந்தானத்தின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram
Share
நடிகர் சந்தானத்தின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
2/8
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சந்தானம். கடந்த 2003 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்களில் மிகவும் ரசிக்கப்பட்டவர் சந்தானம்.
3/8
Photo Credit: instagram
Share
காமெடி நிகழ்ச்சியில் கலக்கிய சந்தானம் பின்னர் வெள்ளித்திரையில் காமெடி நடிகராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சொல்லப்போனால் நடிகர் வடிவேலு திரையுலகில் ஆக்ட்டிவாக இல்லாத காலத்தில் அவரின் இடத்தை நிரம்பியவர் சந்தானம் தான்.
4/8
Photo Credit: instagram
Share
தனது அசத்தலான காமெடி பேச்சுகளுக்கும், மற்றவரை எளிதாக கலாய்க்கும் திறமை உடையவர் சந்தானம். காமெடி நடிகர் வடிவேலுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர் இவர் தான். ஹீரோவுடன் பயணிக்கும் காமெடி நடிகராக பல படங்களில் நடித்திருந்த சந்தானம் என்ன நினைத்தோரே தெரியவில்லை திடீரென ஹீரோவாக களம் இறங்கினார்.
5/8
Photo Credit: instagram
Share
கடந்த 2013 ஆம் ஆண்டு கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் காமெடி பிளஸ் ஹீரோவாக நடித்து கதாநாயகனாக அறிமுகனார். அதன் பின்னர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு என்று தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.
6/8
Photo Credit: instagram
Share
சந்தானத்தின் காமெடி படங்களை காட்டிலும் இவர் ஹீரோவாக நடித்த பல படங்கள் சொல்லும் அளவிற்கு ரசிகர்களை ஈர்க்கவில்லை என்றே சொல்லலாம். காமெடியனாக சந்தனத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஹீரோவாக பார்ப்பது சற்று வித்யசமாகவும், சிலர் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
7/8
Photo Credit: instagram
Share
என்னதான் பல விமர்சனங்கள் வந்தாலும் எதற்கும் செவிசாய்க்காமல் ஹீரோவாக தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் நடித்து அசதி வருகிறார். இந்த நிலையில் இவர் கைவசம் கிக் மற்றும் டிடி ரெட்டிரன்ஸ் என்ற இரு படங்கள் வைத்துள்ளார். அதுவும் டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8/8
Photo Credit: instagram
Share
திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் சந்தானம் சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அந்தவகையில் சந்தானத்தின் குழந்தை மற்றும் மனைவியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications