நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி, குழந்தைகளை பாத்துருக்கீங்களா? அழகிய குடும்ப புகைப்படங்கள்!
நடிகர் ஸ்ரீகாந்த் தனது மனைவி, குழந்தைகளுடன் இருக்கும் குடும்ப புகைப்படங்கள் சில சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.
அறிமுகம்: 2022ல் வெளியான 'ரோஜா கூட்டம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். அறிமுகமான முதல் பாடமே செம ஹிட்டான நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது.
ஹிட் படங்கள்: ரோஜா கூட்டம் வெற்றியை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, போஸ், கனா கண்டேன், நண்பன் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து ஸ்டார் நடிகராக ஜொலித்தார். தமிழில் இவர் இறுதியாக நடித்த படம் 'தினசரி', கடந்த பிப்ரவரி மாதம் தியேட்டரில் வெளியானது.
ஹிட் பாடல்கள்: பல ஹிட் படங்களை கொடுத்த ஸ்ரீகாந்த், "ஆப்பிள் பெண்ணே நீ யாரோ" போன்ற பல ஹிட் பாடல்களையும் கொடுத்து பெண்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பெண்களின் கனவுக்கண்ணனாக வலம் வந்த ஸ்ரீகாந்த், சர்ச்சையில் சிக்கத் தொடங்கினார்.
சர்ச்சை: சினிமாவில் செம உச்சத்தில் இருந்த ஸ்ரீகாந்த், வந்தனா என்பவரை ரகசிய திருமணம் செய்துகொண்டு 3 மாதம் குடும்பம் நடத்திவிட்டு பின்னர் கைவிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையாக வெடிக்க வந்தனாவின் சட்டப்போராட்டங்களுக்கு பின் அவரையே திருமணம் செய்துகொண்டார், ஸ்ரீகாந்த். இவர்களுக்கு இரண்டு குழந்தையும் பிறந்தது.


Click it and Unblock the Notifications