Home / Photos
சூர்யாவை விடாமல் துரத்தும் ஜெய் பீம் விவகாரம்...! குடும்பத்துடன் வெளிநாடு பயணம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
By Chandru
ஜெய் பீம்' பட விவகாரம் தொடர்ந்து பூதாகரமாகி வரும் நிலையில் நடிகர் சூர்யா குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
1/12
Share
ஜெய் பீம் பட விவகாரம் தொடர்ந்து பூதாகரமாகி வரும் நிலையில் நடிகர் சூர்யா குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
2/12
Share
அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்தை சுற்றி நடக்கும் சர்ச்சைகள் இன்னமும் ஓய்ந்தபாடாக இல்லை.
3/12
Share
தமிழ் சினிமாவில் பெரும் புகைச்சலை கிளப்பியுள்ள இந்த விவகாரத்தில் திரையுலக பிரபலங்கள் அனைவரும் ஒன்று திரண்டு சூர்யாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
4/12
Share
மேலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள 'ஜெய் பீம்' படத்தில் இருளர், பழங்குடியினருக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.
5/12
Share
இந்தப்படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளார். தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
6/12
Share
'ஜெய் பீம்' படம் தொடர்பாக பாமக கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் 9 கேள்விகள் எழுப்பி கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
7/12
Share
இந்த கேள்விகளுக்கு பதிலளித்த சூர்யா,சிறந்த படைப்பை பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.
8/12
Share
இந்நிலையில் நடிகர் சூர்யாவை தாக்கினாலோ, எட்டி உதைத்தாலோ அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி பேட்டியளித்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது.
9/12
Share
வன்னியர் சங்கமும் ஜெய் பீம் படக்குழு ரூ.5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என வலியுறுத்தி கோர்ட் நோட்டீஸ் அனுப்பியதோடு, 'ஜெய்பீம்' படத்தை எந்த ஒரு ஒன்றிய மாநில அரசுகளின் விருதுகளுக்கும் பரிந்துரைக்க கூடாது என கூறி இருந்தது.


Click it and Unblock the Notifications