சூர்யாவின் 'கருப்பு' பட டீசரில்.. இதையெல்லாம் கவனிச்சீங்களா? வேற லெவல்
நடிகர் சூர்யா, இன்று தனது 50வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று 'கருப்பு' பட டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகிறது.
சூர்யா: வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமான சூர்யா, தனது விடாமுயற்சியினால் தற்போது இந்திய திரையுலகம் கொண்டாடும் நடிகராக ஜொலித்து வருகிறார். கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படங்களை கவனமாக தேர்வு செய்து நடித்து வரும் சூர்யா, சமூகத்தில் நிகழும் பிரச்சனைகளையும் தனது படத்தின் மூலம் வெளிக்காட்டி வருகிறார். அதேபோல் ரசிகர்களை குஷிப்படுத்தி கொஞ்சம் கமர்சியல் படங்களையும் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தமிழில் இவர் இறுதியாக நடித்த படம் 'ரெட்ரோ'. கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் வசூலில் அமோக வரவேற்பு பெற்றது.
கருப்பு: 'ரெட்ரோ' வெற்றியை தொடர்ந்து 'கருப்பு' படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்து வருகிறார். மேலும் சுவாசிகா, ஷிவதா, யோகி பாபு, நட்டி நட்ராஜ், அனகா ரவி உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடிப்பில் இப்படம் உறுவாகி வருகிறது. இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். அதேபோல் சாய் அபயங்கருக்கு இதுவே இவரின் மூலம் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் பிறந்தநாள் கிப்ட்: சூர்யா, இன்று தனது 50வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு கருப்பு படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு சூர்யாவுக்கு ட்ரீட் கொடுத்துள்ளது. அதனை தொடர்ந்து கருப்பு படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. வேற லெவல் லுக்கில் இருக்கும் சூர்யா, தனது வாயில் சுருட்டுடன், கையில் பெரிய அரிவாளுடன் இருக்கும் காட்சி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
டீசரில் கவனிக்கவேண்டிய விஷயங்கள்: வாயில் சுருட்டுடன் இருக்கும் சூரியாவின் லுக் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் வாயில் சிகரெட்டுடன் வந்து மாஸ் காட்டினார். அதேபோல் இதற்கு முன் 'ஜெய் பீம்' மற்றும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் வழங்கறிஞராக மாஸ் காட்டிய சூர்யா, 'கருப்பு' படத்திலும் வழக்கறிஞர் ரோலில் நடித்துள்ளார். அதேபோல் டீசரில், தர்பூசணி பழத்தை கையில் வைத்துக்கொண்டு விரலை மட்டும் அசைக்கும் சீன் அனைவரின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்துள்ளது. மேலும் ஆக்ஷன் காட்சிகள் ஒவ்வொன்றும் மாஸ் என்றே சொல்லலாம். இப்படியாக கருப்பு படத்தின் டீசர் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
த்ரிஷாவ காணோம்: கருப்பு படத்தின் டீசரில் முழுக்க முழுக்க சூர்யாவின் காட்சிகள் மட்டுமே இடம் பிடித்திருந்தது. ஆக்ஷன் காட்சிகள், டயலாக் என சூர்யாவின் முகம் மட்டுமே இருந்த நிலையில் ஹீரோயினாக நடித்திருக்கும் த்ரிஷாவின் முகம் ஒரே காட்சியில் கூட இடம்பெறவில்லை. இதனால் த்ரிஷாவின் ரோல் சின்னதாக இருக்குமா? அல்லது படக்குழு சர்ப்ரைஸ் வைத்துள்ளதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications